இளன் இயக்கி நடிக்கும் படம் `பியார் பிரேமா கல்யாணம்'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன் "ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் இளனிடம் இருக்கிறது. அவருக்கும், அவருடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இப்படம் டிரெய்லர் நன்றாக இருக்கிறது.
இந்தப் படம் நிறைய ஃபன் ஆன விஷயங்களையும், சில நெருக்கமான தனிப்பட்ட விஷயங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடித்து, நல்ல வெற்றியைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன். மீண்டும் படக்குழுவினருக்கும், Netflix-க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
டிரெய்லரில் இந்த சில நிமிடங்களிலேயே நம்மை நிறைய சிரிக்க வைக்கும் விஷயங்கள் இருந்தது. நான் நிறைய கூச்ச சுபாவம் கொண்டவன் என்னையே ஸ்டார் இரண்டு ஷாட் தான் என்று கூறி நடிக்க வைத்தார். அதில் அவர் மீது கோபம் தான்.. இப்போது அவரே நடிகராகி விட்டார், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.