Malavika Mohanan Pocket Novel
கோலிவுட் செய்திகள்

நீங்கள் எப்போது அழுதீர்கள்..? "மிகுந்த தனிமையில்.." - மாளவிகா மோகனன் பகிர்ந்த வருத்தம்!

நீங்கள் கடைசியாக எப்போது அழுதீர்கள்? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதில் சொன்ன மாளவிகா "அது... கடந்த மாதம் நான் வேலை விஷயமாக சென்னையில் இருந்தேன். நான் அங்கு நீண்ட காலம் தங்கியிருந்தேன்.

Johnson

மலையாளத்தில் அறிமுகமாகி பல மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் கேள்விக்கு பதிலளிக்கும்போது தனது மனவேதனையை பகிர்ந்துள்ளார்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். தற்போது இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் `பாக்கெட் நாவல்' படத்தில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைத்தளங்களில் பதில் அளிப்பார். அப்படி அவர் சமீபத்தில் இன்ஸ்ட்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Malavika Mohanan

அந்த நிகழ்வில் ரசிகர் ஒருவர் `நீங்கள் கடைசியாக எப்போது அழுதீர்கள்?' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதில் சொன்ன மாளவிகா "அது... கடந்த மாதம் நான் வேலை விஷயமாக சென்னையில் இருந்தேன். நான் அங்கு நீண்ட காலம் தங்கியிருந்தேன். என் குழுவினர் அன்பானவர்களாக இருந்தாலும், வீடு, குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களை விட்டு மிக நீண்ட காலம் பிரிந்திருப்பது மிகுந்த தனிமையை ஏற்படுத்தத் தொடங்கிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

நாள் முடிவில் உங்கள் ஹோட்டல் அறைக்குத் திரும்பி வரும் போது, பேசுவதற்கு யாரும் இல்லாமல் இருப்பது... ஒரு கட்டத்தில் அது என்னை பாதிக்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன். அது நாடகத்தனமாக அழுவது போல இல்லை, ஆனால் நான் மிகப் பெரிய மனச்சோர்வு அடைந்தது போல் உணர்கிறேன்" என்றார்.