Anna Ben Con City
கோலிவுட் செய்திகள்

இதில் எப்படி நடிப்பது என்றே தெரியவில்லை! - அன்னா பென் | Anna Ben | Con City

நான் நடிச்ச மீனா பாத்திரத்துக்கு நிறைய அன்பை நீங்க கொடுத்தீங்க. இது மீனாவுக்கு அப்படியே நேர்மாறான பாத்திரம்.

Johnson

அர்ஜூன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, யோகிபாபு நடிப்பில் ஹரீஷ் துரைராஜ் இயக்கியுள்ள படம் `கான் சிட்டி'. ஜூன் 26ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய அன்னா பென் "என்னுடைய முதல் படம் கொட்டுக்காளி, இது என்னுடைய இரண்டாவது படம். நான் நடிச்ச மீனா பாத்திரத்துக்கு நிறைய அன்பை நீங்க கொடுத்தீங்க. இது மீனாவுக்கு அப்படியே நேர்மாறான பாத்திரம். முதலில் ஹரீஸ் வரும் போது எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது என்று மிகவும் டென்ஷனாக இருந்தேன். இதுவரை இப்படியான பாத்திரத்தில் நான் நடித்ததில்லை, மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.

முன்பும் நிறைய கமர்ஷியல் படங்கள் எல்லாம் கதை கேட்டிருக்கிறேன். ஆனால் அதில் எப்படி நான் நடிப்பேன், எப்படி இருக்கும் என தெரியவில்லை. ஆனால் ஹரீஷ் தான் எனக்கு நம்பிக்கை தந்தார். அவரிடம் நான் வியந்து பார்ப்பது, அவருக்கு தேவையானதை பெறுவதில் இருக்கும் பிடிவாதம். எந்த பிரச்னை வந்தாலும், நாம் செய்யலாம் என்ற நம்பிக்கையை ஹரீஷின் முகம் கொடுத்துவிடும். கான் சிட்டி படத்தின் மிக முக்கியமான தூண் நீங்கள் தான்."என்றார்.