A R Rahman Moonwalk
கோலிவுட் செய்திகள்

"படத்துல எனக்கு ஹீரோயின் இல்ல..." - கலகலப்பாக பேசிய `நடிகர்' ஏ ஆர் ரஹ்மான் | Moonwalk | A R Rahman

அந்தக் காட்சியை இரண்டு வருடங்களாக சொல்லிக் கொண்டே இருந்தார். இதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என. 10 நிமிடத்தில் எடுத்து முடித்துவிட்டோம்.

Johnson

பிரபுதேவா நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் படம் `MOONWALK'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு வந்த ஏ ஆர் ரஹ்மான் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். இப்படத்தில் முதன் முறையாக நடிகராக களம் இறங்கியுள்ளது பற்றி கேட்கப்பட "நான் 97ல் `வந்தே மாதரம்' சமயத்தில் இருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சின்ன சீன் அவ்வளவு தான். ஹீரோயினெல்லாம் கிடையாது. அந்தக் காட்சியை இரண்டு வருடங்களாக சொல்லிக் கொண்டே இருந்தார். இதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என. 10 நிமிடத்தில் எடுத்து முடித்துவிட்டோம். பிரபுதேவா இந்த உலகத்தின் ஐகான். இந்தியாவின் பெருமை. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

இப்படத்தின் பணியாற்றியது பற்றி கேட்கப்பட "இயக்குநர் மனோஜ் முதலில் கூறிய போது பிரபுதேவாவும் நீங்களும் சேர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறீர்கள். அந்த மேஜிக்கை நான் திரும்ப கொண்டு வரப்போகிறேன். அப்படி யாரும் இதுவரை யோசித்ததில்லை. முதல் முறை அவர் அப்படி  நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை மதித்து நான் இந்தப் படத்தை செய்தேன்.

கூடவே இந்தப் படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் நானே பாடி இருக்கிறேன், அதற்கு காரணமும் அவருடைய வற்புறுத்தல்தான். ஒவ்வொரு பாடலையும் வேறு யாரையாவது பாட வைப்பேன். ஆனால் அவர் வந்து நீங்களே பாடுங்கள் என்பார். சிலபேர் சொல்வார்கள், செய்வது கம்மியாக இருக்கும். ஆனால் இவர் எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் மேம்படுத்துவது என உழைப்பார்" என்றார்.

எப்போதாவது புதிய யோசனைகளை வரவில்லை என்றால் எப்படி கையாளுவீர்கள் என்றதும் "எனக்கு அது படம் செய்ய வருவதற்கு முன்பிருந்தே தோன்றக்கூடிய விஷயம் அது. அது ஒரு மகிழ்ச்சியான உணர்வு தான். உங்கள் கற்பனை ஆற்றல் வற்றிவிட்டதாக தோன்றும் போதுதான், வேறு என்ன செய்யலாம் என்பதை நோக்கி நகர்வீர்கள். ஒரு க்ளாஸ் பாதி காலியாக இருப்பதாக பார்க்காமல், பாதி தண்ணீர் இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். எப்போதும் நம்பிக்கையை கைவிடக்கூடாது" என்றார் ஏ ஆர் ரஹ்மான்.