Vetrimaaran Mask
கோலிவுட் செய்திகள்

"உங்களுக்கு ஏன் இந்த வேலைனு ஆண்ட்ரியாவ கேட்டேன்" - வெற்றிமாறன் | Andrea | Vetrimaaran | Mask

இந்த படத்துக்காக நான் எம்.ஆர் ராதா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் எம்.ஆர் ராதா ஒரு ரெவல்யூஷனரியா நிறைய விஷயங்களை கேள்வி கேட்டிருக்கிறார். எம்.ஆர் ராதா எதை அவருடைய கலையின் மூலமாக பேசினாரோ, அதுதான் இந்த படத்தினுடைய ஆன்மா.

Johnson

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் இயக்கியுள்ள படம் `மாஸ்க்'. இப்படம் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தின் மெண்டாராக பங்காற்றியுள்ள வெற்றிமாறன் இந்த நிகழ்வில் பேசும் போது "மாஸ்க் பர்சனலாக நான் புதிதான சில விஷயங்கள் கற்றுக் கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் உதவிய ஒரு ஸ்கிரிப்ட். நான் விடுதலை ஃபர்ஸ்ட் பார்ட் முடித்த சமயம். அப்போது எனக்கு ஆண்ட்ரியா ஒரு ஸ்கிரிப்ட்  மெயில் அனுப்பிருந்தார். 'இந்த ஸ்கிரிப்ட் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஐ வாண்ட் டூ ப்ரொடியூஸ் திஸ்' என்றார். ப்ரொடியூஸ் செய்யும் அளவுக்கு என்ன ஸ்கிரிப்ட் இருக்கு பார்க்கலாம் எனப் பார்த்தால், அந்த ஸ்கிரிப்ட்டில் ஒரு நான்கு ஐந்து மொமெண்ட்ஸ் இருந்தது .ரொம்ப சுவாரஸ்யமான மொமென்ட்ஸ், கொஞ்சமும் எதிர்பார்க்காத மொமெண்ட்ஸ், சினிமாவுக்கு ரொம்ப அன்கன்வென்ஷனலான மொமெண்ட்ஸ் இருந்தது. அது என்னை ஆர்வமாக்கியது.

Mask Team

நான் 'இது நல்லா இருக்கு லெட் மீ கம் பேக் அண்ட் ஷேர் மை தாட்ஸ்வித் யூ' என சொன்னேன். சொக்கு ரொம்ப நாளாகவே ஒரு படம் ப்ரொடியூஸ் பண்ணனும் என நினைத்திருந்தார். இப்ப நான் சொக்குவிடம் `ஆண்ட்ரியா ஒரு ஸ்கிரிப்ட், சொன்னாங்க. நல்லா இருக்கு நீங்களும் சேர்ந்து ப்ரொடியூஸ் பண்றீங்களா' என கேட்டேன். அவருக்கும் ஐடியா பிடித்திருந்தது. சார் இதை செய்கிறேன் எனக் கூற, அங்கருந்துதான் இந்த படம் துவங்கியது. நான் இந்தப் படத்தில் அதிகம் தலையிடக் கூடாது என விரும்பினேன். இந்தக் கதை கேட்ட பின் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்தோம்.

கவினுக்கு ஸ்டார் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய காலம். நான் கால் பண்ணி ஐடியாவை சொன்னேன். அவருக்கும் அது பிடித்தது. பிறகு டைரக்டரும் கவினும் சந்தித்தார்கள், ஸ்கிரிப்ட்டில் சில செய்ய முடியாததுபோல் இருந்தது. அதை மட்டும் கொஞ்சம் பில்டர் செய்யலாம் என சொல்லி விவாதித்தோம். இயக்குநர் விகர்ணனிடம் இதை எல்லாம் காட்ட முடியும், சிலவற்றை காட்ட முடியாது என பேசினேன். ஒரு தியேட்டரிகள் படத்தில் என்னவெல்லாம் இருக்கக் கூடாது என விவரித்தேன். அவரிடம் எனக்கு ரொம்ப புடித்த குவாலிட்டி என்ன என்றால் எந்த விதமான பிரஷரையும் ரொம்ப இலகுவாக கையாளக்கூடிய ஆள் அவர். என்னுடைய பிரஷர் மட்டுமல்ல, சொக்கு எனக்கே பிரஷர் போடக்கூடிய ஆள். அவரையும் அழகாக கையாண்டார்.

Kavin

நேற்று (நவ 8) பொல்லாதவன் ரிலீஸ் ஆகி 18 வருஷம் ஆகிறது. கதிரேசன் சார்தான் வந்து பொல்லாதவன் படத்தோட தயாரிப்பாளர். ஆறு தயாரிப்பாளர்கள் என்னையும் என்னுடைய கதைகளையும் வேணாம் என சொன்ன பிறகு ஏழாவதாக என்னுடைய படத்தை தயாரித்தவர் கதிரேசன் சார். நன்றி சார். அப்புறம் தாணு சாரும் வந்திருக்கிறார். அவருக்கும் நன்றி, ஏன் என்றால் தயாரிப்பாளர்கள் மிக தைரியமான ஆட்கள். என்னை மாதிரி ஒருவரை வைத்து படம் எடுக்க நிறைய தைரியம் வேண்டும். அதற்காக சொன்னேன்.

இந்தப் படத்திற்கு ஆர்.டி ராஜசேகரை பரிந்துரைத்தது சொக்குதான். இளம் அணியுடன் ஒரு சீனியர் இருந்தால் நன்றாக இருக்கும் என எனக்கும் தோன்றியது. அவர் ஸ்க்ரிப்ட் படித்துவிட்டு சில யோசனைகளை சொன்னார். இந்த படத்தோட கிளைமாக்ஸ் ஷூட் செய்ததும், நாங்க விடுதலை ஷூட் செய்ததும் அதே இடம்தான். ஆர்.டி ராஜசேகர் சார் குழு மிக நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்.

Vetrimaaran

எனக்கு இந்த கதையை கேட்ட உடனே ஜிவி தான் செய்ய வேண்டும் என தோன்றியது. மற்ற தயாரிப்பாளர்கள் இருவரும் ஜிவி வேண்டாம் என்பது போல் இருந்தனர். இந்தப் படத்திற்கு பெரிய இசையமைப்பாளர் தேவை இல்லை என்றார்கள். கதைக்கு என்ன தேவையோ அதை முயற்சிப்போம் என நான் கூறி ஜீவியிடம் சென்றேன். வந்த உடனே முதல் வேலையாக நாங்கள் செய்தது, ஏற்கனவே ஒரு படத்துக்காக செய்திருந்த பாடலை, தாணு சாரிடம் கேட்டேன்.'அதுக்கு என்னப்பா நீ பண்ணு' என சொன்னார். அதுதான் கண்ணுமுழி.

எடிட்டர் ராமருக்கு உண்மையாக மனதில் படுவதை பேசும் தைரியம் இருக்கிறது. அது என்னை போன்ற ஒரு ஆளுக்கு எப்போதும் தேவை. எஸ்பெஷலி ஆன் தி எடிட் டேபிள் ஐ புஷ் மை செல்ப் ரியலி ஹார்ட், அப்போது 'போதும் நிறுத்துயா அவ்ளதான்யா இது' என சொல்ல எனக்கு ஒரு ஆள் வேண்டும். ராமர் எப்போதும் அதுவும் யோசிக்கவே மாட்டார், 'இது இல்ல சார், இதுதான் சார்' என சொல்லக்கூடிய ஆள். அந்த மாதிரி இன்னைக்கும் வந்து மனசுல பட்டத ரொம்ப நேர்மையாவும் உண்மையாவும் சொன்னதற்கு அவருக்கு நன்றி.

நெல்சன் இந்த படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்து இருக்கிறார். நான் சமீப சினிமாவில் பார்த்த ஒரு நல்ல மனிதர் நெல்சன். சில நேரம் போன் செய்தால் நாங்கள் ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் எல்லாம் பேசி இருக்கிறோம். மாஸ்க் எங்களுக்கு நிறைய பேசுவதற்கான சான்ஸ் கொடுத்த ஒரு ஒரு படமாக அமைந்தது. நெல்சனுடைய பங்கு இந்த ஸ்கிரிப்ட்க்குள் இந்த படத்துக்குள் நிறைய இருக்கிறது.

Nelson Dilipkumar

நான் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்த போது, சொக்கலிங்கம் அசிஸ்டென்ட் மேனேஜர். ஆடுகளம் படத்திலிருந்து என்னுடன் பணியாற்றுகிறார். எடுத்த வேலையை பொறுப்பாக முடிப்பார். அவர் இந்தப் படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஆவது மகிழ்ச்சி. அதே போல ஆண்ட்ரியா இந்த படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஆவது சந்தோஷம். நான் கூட 'உங்களுக்கு எதுக்கு இந்த வேலை நீங்க ப்ரொடியூசரா என்ன பண்ண போறீங்க, இந்த ஸ்கிரிப்ட் எதுக்கு, உங்க கேரக்டர்ல கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் இருக்கே' எனக் கேட்டேன். அதற்கு அவர் 'கொஞ்சம் எல்லாம் இல்லை. இது ப்ராப்பர் நெகட்டிவ் தான். அதனால என்ன இருக்கு.'  என சொன்னார். அப்புறம் 'இது பண்ணா அப்புறம் இதே மாதிரி ரோல்ஸ் தானே கூப்பிடுவாங்க' என கேட்டேன். அதுக்கு 'இப்ப மட்டும் எதுக்கு கூப்பிடுறாங்க, எதுக்கும் கூப்பிடுறது இல்ல. நானே ஒரு படம் ப்ரொடியூஸ் பண்றேன். இந்த கதை எனக்கு புடிச்சிருக்கு' என சொன்னார்.

இந்த படத்துக்காக நான் எம்.ஆர் ராதா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் எம்.ஆர் ராதா ஒரு ரெவல்யூஷனரியா நிறைய விஷயங்களை கேள்வி கேட்டிருக்கிறார். ஒரிஜினலாக விகர்ணன் ஐடியா நாலைந்து நடிகர்களுடைய மாஸ்க் இருக்கு என்பது மாதிரி தான் இருந்தது. கடைசியில் நான் ராதாரவி சார்கிட்ட படம் துவங்கும் முன்பு 'சார் இந்த மாதிரி யூஸ் பண்ண போறோம்' என சொன்னேன், 'எங்க ஐயாவ தப்பா காட்டுவீங்களா' என கேட்டார். 'இல்ல சார் அப்படி எல்லாம் இல்ல சார்' என சொன்னதும் சம்மதித்தார். எம்.ஆர் ராதா எதை அவருடைய கலையின் மூலமாக பேசினாரோ, அதுதான் இந்த படத்தினுடைய ஆன்மாவாக இருக்கிறது. 'அடங்கு என்பார்கள், விலங்குகள் உடைத்து, தடைகளை தகர்த்து வென்று வா வெற்றி வீரனே' என்ற வரிகள்தான் இந்த படம். நவம்பர் 21 மாஸ்க் ரிலீஸ். நவம்பர் 24 அரசன் ஷூட் தொடங்குகிறோம்" என்றார்.