Arjun Theeyavar Kulai Nadunga
கோலிவுட் செய்திகள்

`ஜென்டில்மேன்' கூட அப்படி ஒரு படம் தான் - அர்ஜுன் | Arjun | Theeyavar Kulai Nadunga

இந்த டிரெய்லரின் துவக்கத்தில் நான் எவ்வளவோ கேஸ் பார்த்திருக்கிறேன், இது ரொம்ப peculiar என ஒரு வசனம் வரும். அது போல தான், இந்தப் படமும் ரொம்ப peculiar.

Johnson

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள `தீயவர் குலை நடுங்க' படம் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் அர்ஜுன் "எனக்கு இது மிக முக்கியமான படம், எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ விற்றதாக சொன்னார். ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு சினிமாவில் அனுபவம் இல்லை என்றாலும் சினிமா செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.  அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணி புரிந்துள்ளேன். `ஜென்டில்மேன்' கூட அப்படி ஒரு படம் தான். ஏனென்றால் அது ஒரு வகையில் என்னுடைய சுயநலம். முதல் படம் என்றால் முழு எனர்ஜியுடன் செய்வார்கள். அப்படிதான் தினேஷ்.

Theeyavar Kulai Nadunga

இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார் ஆனால் எல்லாமே படத்திற்காகத்தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இந்த டிரெய்லரின் துவக்கத்தில் நான் எவ்வளவோ கேஸ் பார்த்திருக்கிறேன், இது ரொம்ப peculiar என ஒரு வசனம் வரும். அது போல தான், இந்தப் படமும் ரொம்ப peculiar.

இதில் எனக்கு வித்தியாசமான ரோல். இப்படத்தில் மூன்று ஹீரோ, பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ. ராஜேஷ் அவரது தந்தையின் பெயர், அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். அவர் சின்ன வயதில் தவறிவிட்டார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை. தெலுங்கில் அவர் நடித்த ஒரு படம் 300 கோடி கலெக்ட் செய்திருக்கிறது. அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள்" என்றார்.