அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்து 2002ல் வெளியான படம் `மௌனம் பேசியதே'. த்ரிஷாவின் அறிமுகப்படம், யுவனின் பாடல்கள் பெரிய ஹிட் என அப்போதைய காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. காதல் என்றாலே வெறுப்பாகும் சூர்யாவின் கதாபாத்திரம் தனித்துவமாக இருந்தது. மேலும் படத்தில் உள்ள காமெடிகளும் இப்போதுவரை அனைவரையும் கவர்ந்தது. 24 வருடங்களுக்கு பிறகு இந்தப் படம் மீண்டும் திரைக்கு வருகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடித்து 2001ல் வெளியான படம் `மின்னலே'. ஹாரிஸின் இசை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காதல், சோகம், பிரிவு, பகை என பல உணர்வுகளை பேசிய படம், இப்போதும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் இப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாகிறது.
கதிர் இயக்கத்தில் குணால், சோனாலி பிந்த்ரே நடித்த கல்ட் படம் `காதலர் தினம்'. ஒருதலை காதல் படத்துக்கு என அளவெடுத்து செய்த கதையாக பெரிய அளவு வெற்றியடைந்தது இந்தப் படம். ஏ ஆர் ரஹ்மான் இசையில் மிகப்பெரிய ஹிட்டான பாடல்கள் இப்போதும் பலரது ப்ளேலிஸ்ட்டில் ஒலிக்கும். இந்தப் படமும் மீண்டும் திரைக்கு வருகிறது.
டி ராஜேந்தர் இயக்கி நடித்து 1983ல் வெளியான படம் `உயிருள்ளவரை உஷா'. வெளியானபோதே மிகப்பெரிய சென்ஷேஷன் படமாக வரவேற்கப்பட்டது. இப்போது டிஜிட்டல் முறையில் படம் மெருகேற்றப்பட்டு புதுப்பொலிவுட்டான் திரையில் வெளியாக இருக்கிறது.