மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் சூர்யா
மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் சூர்யாweb

மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ்| “திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த லவ்வு” - சூர்யா வெளியிட்ட க்யூட் வீடியோ

நடிகர் சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது.
Published on
Summary

சூர்யாவின் 'மௌனம் பேசியதே' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகிறது. 2002ஆம் ஆண்டு வெளியான இந்த படம் காதலின் மெல்லிய மாற்றங்களை அழகாக வெளிப்படுத்தியது. யுவன் சங்கர் ராஜாவின் இசையுடன், சூர்யா, லைலா, த்ரிஷா நடிப்பில், இன்றும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. சூர்யா வெளியிட்ட வீடியோவில், காதலின் உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் மற்றும் சூர்யாவின் பழைய திரைப்படங்கள் தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்சினிமாவில் 90'ஸ் மற்றும் 2K காலகட்டங்களில் வெளிவந்த படங்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்தவரிசையில் சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது.

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா, லைலா, த்ரிஷா, நந்தா உள்ளிட்ட திரைப் பிரபலங்களில் நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் ரசிகர்களின் மனதை வென்ற படமாக வெற்றிபெற்றது. அதிலும் காதலை வெறுக்கும் ஒரு இளைஞர் பின்னர் காதலுக்குள் மெல்ல மெல்ல விழும்போது ஏற்படும் மாற்றம் மற்றும் எதிர்பாராத க்ளைமேக்ஸ் உடன் காதல் ஜோடிகளை பெரிதும் கவர்ந்தது மௌனம் பேசியதே திரைப்படம்.

மௌனம் பேசியதே
மௌனம் பேசியதே

அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இடம்பெற்ற ’ஓ சகி, காதல் செய்தால் பாவம், அறுபது ஆயிடுச்சு, ஆடாத ஆட்டமெல்லாம்’ என அனைத்து பாடல்களும் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவர்ட்டாக இன்றுவரை இருந்துவருகிறது.

அந்தவகையில் 24 வருடத்திற்கு பிறகு ரீ-ரிலீஸாகும் மௌனம் பேசியதே படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் சூர்யா
"எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி" - நெகிழ்ச்சியாக பேசிய சூர்யா | Suriya | GVM

சூர்யா வெளியிட்ட வீடியோ..

நடிகர் சூர்யாவின் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மீண்டும் வெளியாவதால் சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அந்த மகிழ்ச்சியை பகிரும் வகையில் வீடியோ வெளியிட்டிருக்கும் சூர்யா, “ஒழுங்கா தானடா இருந்தீங்க திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த லவ்வு, காதலுங்கிறது இங்க இருந்து வரக்கூடாது, இங்க இருந்து வரணும், தனி மரம் தோப்பெல்லாம் ஆகாது. இந்த மாதிரி பல டயலாக்ஸ வாட்ஸப் ஸ்டேட்டஸ், ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸா பார்த்துட்டு இருக்கன்.

20 வருசத்துக்கு முன்னாடி வந்த மௌனம் பேசியதே திரைப்படத்தை இப்பவும் நிறைய பேர் ஃபேவரட் படமா சொல்லிட்டு இருக்காங்க. இயக்குநர் அமீருக்கு இது முதல் படம். என்னுடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. திரிஷா, லைலா, நேஹானு 3 ஹீரோயின்ஸ் இருந்தாலும் கட்டிபுடிக்கிறதுனு எதுவும் இல்லாம ஒரு லவ் ஸ்டோரி. யுவன் சங்கர் ராஜாவோட ஆல்பம் ஹிட்ஸ் சாங்ஸ்ல இதுவும் என்னுடைய மோஸ்ட் ஃபேவரட் படம். ஒரு தலைமுறையே இந்த படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல. இந்தப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகுது, ஒரு ஷோ உங்களோட சேர்ந்து பார்க்க ஆசப்படுறன்” என பேசியுள்ளார்.

மௌனம் பேசியதே வெளியாகும் அதே நாளில், மின்னலே திரைப்படமும் வெளியாகவிருக்கிறது.

மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் சூர்யா
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்| ’கடவுள் கற்பனை, அழகான பெண்கள் நிஜம்..’ சிக்கிய இந்தியர்? - சின்மயி போட்ட பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com