TTT, Draupathi2, Sarver Sundaram, Vaa Vaathiyaar  Pongal Release
கோலிவுட் செய்திகள்

'ஜனநாயகன்' வெளியாகாததால், ரிலீஸுக்கு வரிசைகட்டும் படங்கள்! | Vaa Vaathiyaar | Draupathi 2

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிய `ஜனநாயகன்'. ஆனால் சென்சார் சிக்கல்களினால் ரிலீஸ் தள்ளிப்போனது. எனவே பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் `பராசக்தி' மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி அடுத்தடுத்து படங்கள் வரிசைகட்ட துவங்கியுள்ளன.

Johnson

மோகன் ஜியின் `திரௌபதி 2'

Draupathi 2

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்து 2020இல் வெளியான படம் `திரௌபதி'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரிச்சர்ட் நடிப்பிலேயே இயக்கியுள்ளார் மோகன் ஜி. மேலும் ரக்ஷனா, நட்ராஜ், வேலராம மூர்த்தி, சிராக் சான் உட்பட பலரும் நடித்துள்ள இப்படம் 14ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் நடப்பதுபோல கதை உருவாக்கி எடுத்திருக்கிறார். U/A சான்றிதழ் பெற்று வெளியீட்டுக்கு தயாராக உள்ள இப்படம், ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவாவின் `தலைவர் தம்பி தலைமையில்'

Thalaivar Thambi Thalaimaiyil

ஜீவா நடித்துள்ள படம் `தலைவர் தம்பி தலைமையில்'. தம்பி ராமையா, இளவரசு பிரார்த்தனா, ஜென்சன் திவாகர், ராஜேஷ் பாண்டியன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் பேசில் ஜோசப் நடித்த `Falimy' படம் மூலம் கவனம் ஈர்த்த நிதிஷ்தான் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜனவரி 30 வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படம், தற்போது ஜனவரி 15 வெளியாகும் என படத்தை முன்கூட்டியே வெளியிடுகின்றனர்.

`வா வாத்தியார்' ரிட்டர்ன்ஸ்!

Vaa Vaathiyaar

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கியுள்ள படம் `வா வாத்தியார்'. கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக் எனப் பலரும் நடித்துள்ள இப்படம் முதலில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தேதி டிசம்பர் 12க்கு தள்ளிப் போனது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் பணப் பிரச்னை காரணமாக படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் பொங்கல் ரிலீசாக ஜனவரி 14 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானத்தின் `சர்வர் சுந்தரம்'

சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கி இயக்கிய படம் `சர்வர் சுந்தரம்'. வைபவி சாண்டில்யா, கிரண், ராதா ரவி எனப் பலரும் நடித்த படம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகவிருந்த படம். ஆனால் பல காரணங்களால் தள்ளிப் போய், பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு விஷாலின் `மத கஜ ராஜா' பொங்கல் வெளியீடாக வந்து பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகனுக்கு பதிலாக, தெறி ரீ-ரிலீஸ்!

`ஜனநாயகன்' வெளியாகும் என காத்தருந்த விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கும் விதமாக விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய `தெறி' படத்தை ஜனவரி 15ஆம் தேதி ரீ- ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. மேலும் விஜயின் மெர்சல் படமும் ரீ- ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.