Cibi Chakaravarthi, Rajini Thalaivar 173
கோலிவுட் செய்திகள்

`கவனவுகள் நனவாகும், அற்புதம் நிகழும்' - `Thalaivar 173' பற்றி நெகிழும் சிபி | Cibi Chakaravarthi

சிறு நகரத்திலிருந்து வந்த பையனுக்கு பெரிய கனவாக இருந்ததே, அவனுடைய ஆதர்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டாரை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுப்பதே.

Johnson

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் `தலைவர் 173' படத்தை `டான்' சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்ற அறிவிப்பு இன்று வெளியானது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், 2027 பொங்கலுக்கு படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான புரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தை இயக்குவது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. அந்தப் பதிவில் "ஒரு சிறு நகரத்திலிருந்து வந்த பையனுக்கு பெரிய கனவாக இருந்ததே, அவனுடைய ஆதர்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டாரை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுப்பதே. அதுவே அவனை சினிமாவை நோக்கி அழைத்து வந்தது. அந்தக் கனவும் ஒரு நாள் நிறைவேறியது. அதன்பின் அவனுக்கு தன் சூப்பர்ஸ்டாரை இயக்க வேண்டும் என்ற கனவு உருவானது. அதன் அருகில் வரை சென்றும், தவறிப்போனது. ஆனாலும் அது ஒரு நாள் நடக்கும் என அவன் தொடர்ந்து நம்பினான். அந்த நாள் இதுதான். #Thalaivar173 Day.

Cibi

எனக்கு தலைவர் சொன்னது நினைவுக்கு வந்தது `கவனவுகள் நனவாகும், அற்புதம் நிகழும்'. உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் தயாரிப்பாளர்களாக வந்தது என் கனவிற்கு அப்பாற்பட்ட ஒன்று. இதற்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் மற்றும் உங்கள் நம்பிக்கையை காக்க ஆத்மார்த்தமாக உழைப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.