H Vinoth, Vijay எக்ஸ் தளம்
கோலிவுட் செய்திகள்

விஜய் குறித்து ஹெச்.வினோத் சொன்ன ’ஜனநாயகன்’ அப்டேட்! | Jana Nayagan | Vijay | H Vinoth

” ’ஜனநாயகன்’ படம் விஜய் சாருக்கு பக்கா ஃபேர்வெல் திரைப்படமாக இருக்கும்” என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

Johnson

விஜயின் அரசியல் என்ட்ரி ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பொங்கல் ரிலீஸாக வர விறுவிறுப்பாக ரெடியாகிறது `ஜனநாயகன்'. ஹெச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு. தொடர்ந்து ஹெச்.வினோத் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் பி.டி.எஸ் காணொளியை வெளியிட்டிருந்தார்கள். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பாக இயக்குநர் ஹெச்.வினோத் பேசிய வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.

H Vinoth, Vijay

அந்த நிகழ்வில் ஹெச்.வினோத், " ’ஜனநாயகன்’, விஜய் சாருக்கு பக்கா ஃபேர்வெல் திரைப்படமாக இருக்கும். மாஸ், கமர்ஷியல், ஆக்ஷன் என மூன்றையும் எதிர்பார்த்து படத்திற்கு வாங்க. திரைப்படம் நிச்சயமாக ஒரு கம்ப்ளீட் மீல்சாக இருக்கும்" எனக் கூறியிருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் கே நாராயணன், "தளபதியின் அசாதாரண சினிமா பயணத்திற்கு நியாயம் செய்யும் ஒரு படத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 'ஜன நாயகன்' ஃபேர்வெல் மட்டும் கிடையாது, இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டமாகவும் இருக்கும்," எனக் கூறியிருந்தார்.