கில்லி நினைவுகளை பகிரும் இயக்குநர் தரணி
கில்லி நினைவுகளை பகிரும் இயக்குநர் தரணி  முகநூல்
கோலிவுட் செய்திகள்

“காமெடி செய்ய சொன்னபோது விஜய் ரியாக்‌ஷன் இதுதான்...” - ‘கில்லி’ நினைவுகளை பகிரும் இயக்குநர் தரணி!

PT WEB

தமிழகத்தின் திரையரங்குகள் எல்லாம் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களையும், போஸ்ட்களையும் போட்டு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். படத்திற்கு இடையே வரும் ஒவ்வொரு பாடலின்போதும், ரசிகர்கள் ஆட்டமாடி ஆர்ப்பரிக்கிறார்கள். இவையெல்லாம், 20 வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன படத்திற்கு என்றால் நம்ப முடிகிறதா...?

ஆம், விஜய்யின் கில்லி படத்தின் ரீரிலீஸ் தருணம் இது....

தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்காக உருவானது, கில்லி. தமிழில் தரணி இயக்க, விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜின் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியானது. இரு தசாப்தங்கள் கழித்து இப்படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பினால், திக்குமுக்காடி போயிருக்கிறது, கில்லி படக்குழு.

இதுகுறித்து, புதிய தலைமுறைக்கு பிரத்யேகப் பேட்டியளித்த இயக்குநர் தரணி, “கில்லியின் வெற்றிக்கு விஜயின் உழைப்பும், அர்ப்பணிப்பும் முக்கிய காரணம். ஆண்டுகள் கடந்தாலும், கில்லி திரைப்படம் ரசிகர்களின் மனதில் உயிர்ப்புடன் இருப்பதை கண்டு ஆனந்தம் அடைகிறேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். ரீரிலீஸ் படம் என்பதால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வசூலில் குறைந்த அளவே பங்கு கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

கில்லி ரீ-ரிலீஸ்

ஒரு திரைப்படத்துக்கு பின்னணியில், ஓராயிரம் நினைவுகள் ஒளிந்திருக்கும். அப்படி, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் ஒளிந்திருந்த நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்திருக்கிறது, கில்லி திரைப்படம்...!