Vijay SAC
கோலிவுட் செய்திகள்

’தலைவா’ படப் பிரச்னைக்கு ஜெயலலிதாவை சந்தித்தாரா விஜய்? - எஸ்ஏசி சொன்ன பதில் | Vijay | SAC

ஜெயலலிதாவும் விஜயும் சந்தித்தது, 2011இல் சைதை துரைசாமி வீட்டுக் கல்யாணத்தில் நடந்தது. அப்போது ஜெயலலிதா வெளியே போனார், விஜய் உள்ளே போனார்.

Johnson

தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறார். இந்நிலையில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜயின் ’தலைவா’ பட வெளியீட்டில் சிக்கல் வந்தபோது ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியது உண்மையா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன எஸ்ஏசி, "சந்தித்தார் என யாரையாவது சொல்லச் சொல்லுங்கள். `நாங்கள் ஒரு படம் எடுத்திருக்கிறோம். இது யாரையும் எதிர்த்து இல்லை. படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு இவ்வளவு நஷ்டம் ஏற்படும். எங்கள் உழைப்பு வீணாகிவிடும். எனவே CM இதனை கருத்தில் கொள்ள வேண்டும்' என ஒரு வீடியோ பேசி வெளியிட்டார்.

Thalaiva

ஆனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார் என யாரையாவது சொல்லச் சொல்லுங்கள். அப்படி ஒரு சந்திப்பு நடக்கவே இல்லை. ஜெயலலிதாவும் விஜயும் சந்தித்தது, 2011இல் சைதை துரைசாமி வீட்டுக் கல்யாணத்தில் நடந்தது. அப்போது ஜெயலலிதா வெளியே போனார், விஜய் உள்ளே போனார். அதன் விளைவாக 2011 தேர்தலின்போது நான் ஜெயலலிதாவை சந்தித்தேன். மக்கள் இயக்கத்தின் மூலம் ஆதரவு தருமாறு அவரே கேட்டார். நாங்களும் ஆதரவு கொடுத்தோம்.

அப்போது கூட அதிமுகவுக்கு ஓட்டுபோடுங்கள் என விஜய் பேசவே இல்லை. எனக்கு சில தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்ய வேண்டும் எனச் சொல்லி இருந்தார்கள், நான் செய்தேன்.

SAC and Vijay

ஜெயித்த பிறகு எல்லோரும் போய் மரியாதை நிமித்தமாக சந்திப்பதைப்போல, நாங்கள் இருவரும் போய் அவரைச் சந்தித்தோம். அப்போது மூன்று பேரும் பேசினோம், ’நன்றி’ சொன்னார். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு சமூக உணர்வோடு எடுக்கப்படும் விஜய் படங்கள் எல்லாவற்றுக்கும் பிரச்னை வந்திருக்கிறது. அது, அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல, திமுக ஆட்சியிலும் வந்திருக்கிறது. அதை எதிர்த்துப் போராடிதான் படங்கள் வெளியாகின" என்றார்.