Rajini, Kamal Lokesh Kanagaraj
கோலிவுட் செய்திகள்

ரஜினி, கமலை UNFOLLOW செய்தாரா லோகேஷ் கனகராஜ்? | Lokesh Kanagaraj | Rajini | Kamal

லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் Unfollow செய்தார் என கடந்த இரண்டு நாட்களாக பேசப்பட்டு வருகிறது.

Johnson

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என உறுதி செய்யப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் அவர்களை சமூக வலைதளத்தில் Unfollow செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். ஆரம்ப காலங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் 1979இல் வெளியான `நினைத்தாலே இனிக்கும்' படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி இணையாமல் இருந்தது. `தில்லு முல்லு' படத்தில் கமல் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது, இந்தியில் அமிதாப் பச்சனுடன் ரஜினி - கமல் இணைந்து நடித்த `Geraftaar' போன்ற படத்திற்குப் பிறகு முற்றிலுமாக இக்கூட்டணி பிரிந்தது. இந்த சூழலில் 46 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து படத்தில் நடிக்க உள்ளனர் என்பதை அவர்களே உறுதி செய்தனர்.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும், அதனை படம் சம்பந்தப்பட்ட யாரும் உறுதி செய்யவில்லை. ரஜினியும் ஒருமுறை இப்படம் பற்றி பேசிய போது, தானும் கமலும் இணையும் படத்திற்கு இன்னும் இயக்குநரும் கதையும் முடிவாகவில்லை எனக் கூறினார். மேலும் ரஜினி - கமல் இணையும் படத்தை நெல்சன் இயக்கப் போகிறார் எனவும் தகவல்கள் பரவி வந்தன. அதற்கு முன்பு ரஜினி - சுந்தர் சி படம் நடக்க உள்ளது எனவும் செல்லப்பட்டது. அதன்படியே ரஜினியின் அடுத்த படத்தை ராஜ்கமல் மூலம் கமல் தயாரிக்க, அப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார் என இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் Unfollow செய்தார் என கடந்த இரண்டு நாட்களாக பேசப்பட்டு வருகிறது. உண்மையில் நடந்தது என்ன?

எக்ஸ் தளத்தில் லோகேஷ் பின்தொடர்பவர்களின் பட்டியலில் ரஜினியும், கமலும் காட்டவில்லை. ஆனால் லோகேஷ் எக்ஸ் தளத்தில் 119 பேரை பின் தொடர்கிறார். அதில் 50 பேர் மட்டுமே பட்டியலில் காட்டுகிறது. இன்னும் சொல்லப்போனால் கமலுடன் எடுத்த புகைப்படத்தை தான் தன்னுடைய கவர் புகைப்படமாக வைத்துள்ளார். அதே போல இன்ஸ்டாகிராமில் கமல்ஹாசனை பின் தொடரும் லோகேஷ் ரஜினியை Unfollow செய்தார் எனக் கூறப்படுகிறது. இன்ஸ்டாவில் அவர் பின் தொடர்வோர் பட்டியலில் ரஜினி பெயர் காட்டவில்லை என்பதும் உண்மை தான். ஆனால் லோகேஷ் இன்ஸ்டாவில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 91. அதில் 70 பேர் தான் நமக்கு காட்டுகிறது. ஒருவேளை இது தொழிநுட்ப பிரச்சனையாக இருக்கலாம். இல்லை என்றால் முன்பிருந்தே லோகேஷ் பின் தொடராமல் இருந்திருக்கலாம். எனவே லோகேஷ் ரஜினி கமலை, அன்ஃபாலோ செய்தாரா என்பதில் எந்த உறுதியும் இதுவரை இல்லை என்பதே உண்மை.