'ஜீவி' புகழ் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, சரவணன், மாறன், லிஸ்ஸி ஆண்டனி, அருவி மதன், சுப்ரமணியம் சிவா ஆகியோரின் நடிப்பில் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள படம் `லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'. அதன் விறுவிறுப்பான கதைக்களம், தீவிரமான கதாபாத்திர உலகம் மற்றும் உணர்வுகள் நிறைந்த கதை சொல்லல் ஆகியவற்றால் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் படக்குழு, தற்போது அதன் முதல் பாடலான ‘காதல் செய்வீர்’ பாடலை வெளியிட்டுள்ளது. மகாகவி பாரதியார் எழுதிய காதல் செய்வீர் பாடல், காலத்தால் அழியாத கவிதை நயம் காரணமாக தலைமுறைகளைத் தாண்டி இதயங்களை கவர்ந்து வருகிறது. இப்போது லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்திற்காக புதுமையாக மறு வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசையில் விஜய் பிரகாஷ் மற்றும் பவித்ரா சாரி குரலில் உருவாகியுள்ள இப்பாடல் நினைவலைகள், காதல் மற்றும் காலத்தால் அழியாத இலக்கிய மேன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இசை அனுபவத்தை இது ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.