Philippa Northeast நடித்துள்ள சீரிஸ் `My Brilliant Career'. எழுத்தாளராக ஆசைப்படும் பெண்ணுக்கு காதலால் வரும் சிக்கல்களே கதை.
Julia Hart இயக்கியுள்ள படம் `Dont Say Good Luck'. மேடை நாடகம் ஒன்றுக்கு தயாராகும் சோபியின் குடும்பத்தில் நடக்கும் சிக்கல்களே கதை.
ஆண்டனி வர்கீஸ் நடித்த படம் `Kattalan'. யானை தந்த கடத்தலில் நடக்கும் மோதல்களே கதை.
சனந்த், மடோனா, இமையா நடித்த படம் `ஹார்டின்'. காதல் சிக்கல்களே கதைக்களம்.
த்ரிகுன் நடிப்பில் உருவான படம் `Mr Work From Home'. வீட்டிலிருந்தே பணியாற்றும் இளைஞனுக்கு விவசாயத்தில் வரும் ஆர்வமும் அதனை தொடர்ந்த அவர் முயற்சிகளுமே கதை.
அபிலாஷ் இயக்கிய படம் `Aroopi'. அடைக்கப்பட்டிருந்த ஒரு ஆத்மாவை சில திருடர்கள் விடுவித்தபின் நடப்பவையே கதை.
சஞ்சய் தத் நடித்த படம் `Aakhri Sawal'. தன் ஆசிரியர் மீது ஒரு மாணவன் வைக்கும் குற்றச்சாட்டும், அதை தொடர்ந்து எழும் சர்ச்சைகளுமே கதை.
கங்கனா ரனாவத் நடித்த படம் `Bharat Bhhagya Viddhaata'. மும்பை தாக்குதல் சமயத்தில் மருத்துவமனை ஒன்றில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்.
ஷாஹித் கபூர், க்ரித்தி சனன், ராஷ்மிகா மந்தனா நடித்த படம் `Cocktail 2'. தியா - குணால் வாழ்க்கையை ஒரு நபரின் வருகை என்ன செய்கிறது என்பதே கதை.
சூர்யா நடித்துள்ள படம் `விஸ்வநாத் & சன்ஸ்'. மகனை காப்பாற்ற ஒரு தந்தை எடுக்கும் முடிவால் வரும் விளைவுகளே கதை.
விஷால் நடித்து இயக்கியுள்ள படம் `மகுடம்'. கேங்ஸ்டர் - மெடிக்கல் ரெப் இடையேயான மோதலே கதை.
கங்கா இயக்கியுள்ள படம் `Paanchaali Pancha Bharthruka'. ஒரு கொலைவழக்கில் சிக்கும் நான்கு நண்பர்களின் கதை.
ராஜ்குமார் சந்தோஷி இயக்கியுள்ள படம் `Batwara 1947'. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது நடக்கும் சம்பவமே கதை.
அன்னா ஹத்தாவே நடித்துள்ள படம் `The End of Oak Street'. அமானுஷ்ய சம்பவம் ஒன்றினால் வினோதமான ஒரு இடத்துக்கு செல்லும் தெரு ஒன்றை சுற்றி நடக்கும் கதை.