Atlee Priya Baby
கோலிவுட் செய்திகள்

"வீட்டுக்கு வரும் புது உறுப்பினர்!" அட்லீ ப்ரியா தம்பதியின் அறிவிப்பு | Atlee | Priya

அட்லீ - ப்ரியா தம்பதிக்கு 2023ல் ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு மீர் எனப் பெயரிட்டனர். தற்போது இரண்டாவதாக ப்ரியா கருவுற்றிருப்பதை பதிவிட்டிருந்தனர்.

Johnson

`ராஜா ராணி' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. விஜய் நடிப்பில் `தெறி', `மெர்சல்', `பிகில்' ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாறி, பாலிவுட்டில் ஷாரூக்கான் நடிப்பில் `ஜவான்' படம் மூலம் பெரிய ஹிட் கொடுத்தார். இன்று அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா தங்களது இரண்டாவது குழந்தையின் வருகையை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர்.

அட்லீ - ப்ரியா தம்பதிக்கு 2023ல் ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு மீர் எனப் பெயரிட்டனர். தற்போது இரண்டாவதாக ப்ரியா கருவுற்றிருப்பதை, "எங்கள் புதிய உறுப்பினர் சேர்ந்ததால் எங்கள் வீடு இன்னும் இதமாக மாறப்போகிறது! ஆம்! நாங்கள் மீண்டும் கர்ப்பமாகிவிட்டோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும், அன்பும், பிரார்த்தனைகளும் தேவை. அன்புடன், அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் கூஃபி." என்று எழுதப்பட்டிருந்தது. அதனுடன் அவர்களின் குடும்ப புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தனர்.

இதனை அட்லீ பதிவிட்டதும், சமந்தா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தொடர் வெற்றி படங்களுக்கு பின் அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார்.