Arya Mr X
கோலிவுட் செய்திகள்

ஆர்யாவின் `மிஸ்டர் எக்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Arya | Mr X

விஷ்ணு விஷால் நடித்த FIR படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மனு ஆனந்த், அடுத்த படமாக துவங்கியது ‘மிஸ்டர் எக்ஸ்'. 2024லிலேயே இப்படம் நிறைவடைந்துவிட்டாலும் வெளியாகாமல் இருந்தது.

Johnson

ஆர்யா நடிப்பில் மனு ஆனந்த் இயக்கியுள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்'. இதில் கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் நடித்த FIR படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மனு ஆனந்த், அடுத்த படமாக துவங்கியது ‘மிஸ்டர் எக்ஸ்'. 2024லிலேயே இப்படம் நிறைவடைந்துவிட்டாலும் வெளியாகாமல் இருந்தது. இப்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 17 என அறிவிக்கப்பட்டுள்ளது.

’சர்தார்’, ’லப்பர் பந்து’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) படத்தைத் தயாரித்துள்ளது. ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான், தூத்துக்குடி, குலுமணாலி, மும்பை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள்  அசர்பைஜானிலும் படமாக்கப்பட்டுள்ளன.