Arjun Das Con City
கோலிவுட் செய்திகள்

அர்ஜூன் தாஸின் `கான் சிட்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Con City | Arjun Das

நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.

Johnson

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கிய ‘கான் சிட்டி’ படம், வித்தியாசமான கதைக்களம் கொண்ட நகர வாழ்க்கை பின்னணியில், கடனில் சிக்கிய மிடில் கிளாஸ் குடும்பத்தின் போராட்டத்தை சுவாரஸ்யமாக சொல்லுகிறது. ஷான் ரோல்டன் இசையில் வெளியான ‘ரா ரா ரங்கையா’, ‘நான் தான் கிங்கு’ பாடல்கள் வைரலாகி, படம் ஜூன் 26 அன்று வெளியிடப்பட உள்ளது.

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில்  அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்  இயக்கியுள்ள படம் `கான் சிட்டி'. பட அறிவிப்பின் போதிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

Arjun Das

`கான் சிட்டி' படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக  உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.

ஷான் ரோல்டன் இசையில் உருவான “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஜூன் 26 ரிலீஸ் ஆக உள்ளது என அறிவித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.