Arasan, RGV, Padayappa, Abbas, Peaky Blinders Top 10 Cinema News
கோலிவுட் செய்திகள்

அரசன் ஷூட்டிங் to படையப்பா ரீ-ரிலீஸ் | இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் | Simbu | Arasan | Padayappa

இன்றைய சினிமா செய்திகளில் `அரசன்', அப்பாஸ் ரிட்டர்ன்ஸ், `படையப்பா' ரீ-ரிலீஸ் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.

Johnson

மதுரையில் துவங்கும் அரசன்!

Arasan

மலேசியாவில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிம்பு "மதுரையில் 9ம் தேதியிலிருந்து `அரசன்' பட ஷூட்டிங் துவங்குகிறது. இங்கிருந்து நேரடியாக ஷூட்டிங் செல்ல இருக்கிறேன்" என அப்டேட் தந்துள்ளார்.

சூர்யா படத்தில் நஸ்லென்?

Naslen

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக `ஆவேஷம்' ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் எனவும், அதில் நஸ்லென் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

`வா வாத்தியார்' டிரெய்லர்

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கியுள்ள `வா வாத்தியார்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் வெளியாக இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் அப்பாஸ்!

Abbas

மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் - ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் படத்திற்கு `ஹேப்பி ராஜ்' என தலைப்பு அறிவிப்பு. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வருகிறார் அப்பாஸ்.

`Lockdown' புது ரிலீஸ் தேதி!

ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் `Lockdown'. இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருந்த நிலையில், மழையின் தீவிர தன்மை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இப்படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

`படையப்பா' ரீ-ரிலீஸ்

ரஜினிகாந்தின் 50 ஆண்டு சினிமா பயணத்தையும், அவரது பிறந்தநாளையும் முன்னிட்டு வரும் டிசம்பர் 12ம் தேதி `படையப்பா' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர்.

ஹீரோவான ராம் கோபால் வர்மா

RGV

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா அறிமுக இயக்குநர் நுதன் இயக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வருகிறது, விரைவில் டீசர் வெளியாகவுள்ளது.

இரு பாகங்களாக வரும் Khalifa

வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்து வரும் `Khalifa-The Bloodline' படம் The Intro மற்றும் His Regin என இரு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகம் 2026 ஓணம் வெளியீடாக வர உள்ளது. இப்படத்தில் மோகன்லாலும் முக்கியமான ரோலில் நடிக்கிறார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

`A Knight of the Seven Kingdoms' டிரெய்லர்

Games of Thrones சீரிஸின் spinoffஆக உருவாகியுள்ள `A Knight of the Seven Kingdoms' சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸ் 2026, ஜனவரி 19ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

Peaky Blinders Movie Release Date

உலகம் முழுக்க பெரிய வரவேற்பை பெற்ற Peaky Blinders சீரிஸ், `Peaky Blinders: The Immortal Man' என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. இப்படம் 2026 மார்ச் 6ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளிலும், மார்ச் 20ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் வெளியாகும் என அறிவிப்பு.