Vetrimaaran, Simbu - Arasan web
கோலிவுட் செய்திகள்

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அரசன்! | Arasan | Vetrimaaran | Simbu

அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கும் என தகவல் பரவியது. ஆனாலும் படப்பிடிப்பு துவங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலே இருந்தது.

Johnson

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. விஜய் சேதுபதி இணைந்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்றது. வெற்றிமாறன், சிம்பு இணைந்து பணியாற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படம் 'அரசன்'. இப்படத்தின் அறிவிப்பு, புரோமோ வெளியானதில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவானது. மேலும் இது வடசென்னை உலகத்தில் நிகழும் கதை என்பதும், படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்பதும் கூடுதல் சர்ப்ரைஸ்.

Arasan

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் கோவில்பட்டியில் துவங்கியது. சில வாரங்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கும் என தகவல் பரவியது. ஆனாலும் படப்பிடிப்பு துவங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலே இருந்தது. இப்போது ஒரு வழியாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் சிம்பு வெற்றிமாறன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இன்றும் தயாரிப்பாளர் தாணு புது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய விருது விழா ஒன்றில் அரசன் பற்றி கேட்கப்பட்ட போது "`அரசன்' பொல்லாதவனுக்கு முன்னால் எழுதிய கதை. எப்போதும் நான் படம் எடுக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தை, இந்தப் படத்தில் எடுத்துக் கொள்ள மாட்டேன். அது சீக்கிரமே முடிந்துவிடும். இன்னும் கொஞ்ச நாளில் படம் சம்பந்தப்பட்ட ஏதாவது காட்சியை வெளியிடுவோம். அதில் நாங்கள் செய்யும் வேலை என்ன என்று உங்களுக்கு புரிந்துவிடும்." எனத் தெரிவித்தார் வெற்றிமாறன்.