Anirudh Ani
கோலிவுட் செய்திகள்

"நான் சினிமாவுல நடிக்காததுக்கு இதுதான் காரணம்!" - அனிருத் | Anirudh

இந்த 15 வருடத்தில் ஆடியன்ஸ் எனக்கு இவ்வளவு பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாது, பல மொழிகளில், இசை கச்சேரிகளுக்கு செல்லும்போது உலகளவிலும்கூட கிடைக்கும் அன்பு ஈடு இணையற்றது.

Johnson

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து பல முக்கியமான படங்களில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு இசை அனிருத் தான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

kh x rk

”பெரிய படங்களில் பணியாற்றுகிறீர்கள். அடுத்து ரஜினி - கமல் படத்தில் பணியாற்றுகிறீர்கள். இப்படியான படங்களில் வேலை செய்யும்போது ஏதாவது அழுத்தம் இருக்குமா” எனக் கேட்கப்பட, "நாங்கள் எப்போதும் அழுத்தத்தை எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. பாடல் உருவாக்கும் ப்ராசசை நாங்கள் ரசிக்கிறோம். ஏதாவது ஒன்றை முயன்றுகொண்டே இருப்போம். அது ஆடியன்ஸுக்கும் பிடித்துவிடுகிறது. இதற்குள் அழுத்தம் என்பது இருவரும் இணைந்து வருகிறார்களே என்ற வகையில் மனதுக்குள் இருக்கலாம். ஆனால், ஜாலியாக ஒரு ரெட்ரோ வைப்பில் ஒன்று செய்யலாம் என முயற்சித்தோம்" என்றார்.

’’லோகேஷ் ஹீரோவாக நடிக்கிறார், உங்களுக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை இருக்கிறதா’’ எனக் கேட்கப்பட, " ‘நீங்க ஹீரோவா நடிங்க, அதுக்கும் நான்தான் ம்யூசிக் பண்ணுவேன்’ என்றுதான் லோகேஷிடமும் சொன்னேன். என்னுடைய ஆர்வம் இசைதான். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், இந்த 15 வருடத்தில் ஆடியன்ஸ் எனக்கு இவ்வளவு பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாது, பல மொழிகளில், இசை கச்சேரிகளுக்கு செல்லும்போது உலகளவிலும்கூட கிடைக்கும் அன்பு, ஈடு இணையற்றது. நம்மை அவர்கள் நேசிக்கக் காரணம், நம்முடைய இசை. எனவே அந்த இசையைவிடாமல் இன்னும் பெரிய ஓட்டம் ஓட வேண்டும். இன்னொன்று என்னால் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று பொறுமையாக நடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. எனக்கு பிடித்த இசையில் என்ன சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் என்னுடைய சிந்தனை" என்றார்.

அனிருத்

சமீபத்தில் ரிலீஸ் ஆனா `ஆயா ஷேர்' பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது பற்றி கேட்கப்பட, "அது அனைவரின் கூட்டு உழைப்புதான். பாடல், பாடல் வரி, பாடகர் பாடிய விதம், நானியுடைய நடனம் இப்படி எல்லாம் சேர்ந்து வந்தால்தான் ப்ளாஸ்ட ஆகும். வெளியான இரண்டு நாட்களுக்குளாகவே இவ்வளவு வரவேற்கப்படுவது பெரிய சந்தோஷம்" என்றார்.