Akash Murali - H Vinoth Pt web
கோலிவுட் செய்திகள்

ஹெச் வினோத் உதவி இயக்குநர் படத்தில் ஆகாஷ் முரளி! | Akash Murali

1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளதாம்.

Johnson

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். இவர் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நடிகர் முரளியின் இரண்டாவது மகன் மற்றும் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் நடிக்கும் இரண்டாவது படம் இது. அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது.

Romeo Pictures

நேற்று நடைபெற்ற இப்படத்தின் துவக்கவிழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இயக்குநர் ஹர்ஷவரதன் ஹெச் வினோத் இயக்கிய துணிவு மற்றும் ஜனநாயகன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். எனவே இந்நிகழ்வில் ஹெச் வினோத் கலந்து கொண்டார். கூடவே ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் நடிக்கும் ரவி மோகனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளதாம். தற்போது படத்துக்காக தீவிரமான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.