Anilkumar Coco & Nut
கோலிவுட் செய்திகள்

நடிகராக அறிமுகமாகும் அஜித்தின் சகோதரர்! | Ajithkumar | Anilkumar

ஜூன் மாதம் சிகாகோவில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஒரு மென்மையான ஒரு காட்சியில் நடிக்கிறேன்.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இப்போது அவரது குடும்பத்திலிருந்து புதிதாக ஒருவர், சினிமாவில் களம் இறங்குகிறார். அஜித்குமாரின் சகோதரர் மற்றும் Jodi365 நிறுவனர் மற்றும் சிஇஓ அனில்குமார். இவர்தான் அஜித் குடும்பத்திலிருந்து புதிதாக சினிமாவில் களம் இறங்குபவர்.

அனில்குமார் Coco & Nut என்ற ஹாலிவுட் ரொமான்டிக் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். இதுபற்றி அனில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஹாலிவுட் காதல் நகைச்சுவை படமான கோகோ அண்ட் நட்டில் நான் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று எழுதினார்.

மேலும், "கடந்த அக்டோபரில் சென்னையில் ஜஸ்டின் பிரபாகரனின் கால்களைத் தட்டிப் பாடும் பாடலின் பதிவைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஜூன் மாதம் சிகாகோவில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மென்மையான ஒரு காட்சியில் நடிக்கிறேன். ஒரு நாள் முழுவதும் நடக்கும் ஓர் உட்புற படப்பிடிப்பாக இது இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார் அனில்குமார்.