இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா. சமீபத்தில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டவர், மாணவர்கள் மத்தியில் பேசினார். அதில் பிடித்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றுவது பற்றி பகிர்ந்து கொண்டார். தமன்னா பேசிய போது "என் இளமை காலத்தில் எனக்கு நடந்த சிறந்த விஷயம், எனக்கு பிடித்த துறையை நான் தேர்ந்தெடுத்து பணியாற்ற துவங்கியது. நீங்களும் உங்கள் வாழ்வின் அந்த கட்டத்தில் இருக்கிறீர்கள். என்ன பிடிக்கும் என கண்டடையும் இந்த காலகட்டம் உங்கள் வாழ்வின் மிக முக்கியமானது.
எனக்கும் அது நடந்திருக்கிறது. நான் பள்ளியில் படிக்கும் போதே, நான் ஒரு நடிகையாக வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தது. சினிமா துறைதான் என முடிவு செய்த பின்னர் அதற்கான வேலைகளை செய்தேன். இது எல்லா நேரமும் சுலபமானதாக இருக்காது. ஆனால் இதற்காக வரும் இழப்புகளையோ, கடினமான நாட்களையோ கடக்கும் மனநிலையை நீங்கள் உண்டாக்கி கொள்ள வேண்டும். ஒரு போதும் வேலை மேல் உள்ள காதலை கைவிட்டு விடக்கூடாது.
நீங்கள் பணியாற்றியதிலேயே ஸ்டைலிஷ் ஸ்டார் என்றால் யார்? எனக் கேட்கப்பட, "நான் ஆரம்ப காலகட்டத்தில் அல்லு அர்ஜூனுடன் பணியாற்றினேன். அவர் சினிமாவில் மட்டுமில்லை, சாதாரணமாகவே மிக ஸ்டைலிஷான ஆள். 15 வருடங்களுக்கு முன்பே அவர் அப்படித்தான். இப்போது அவரின் வளர்ச்சியை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் மிக எளிமையான மனிதர். மிகவும் மென்மையாக பேசக்கூடியவர். ஆனால் அவர் நடனமாட ஆரம்பித்தாள் யாரும் முன்னே நிற்க முடியாது.
அஜித் சார் மிக அன்பானவர். அவர் எனக்காக இட்லி செய்து கொடுப்பார். அவரது கேரவனில் சமைப்பார். அவருக்கு சமைத்து கொடுப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் கேரவனில் இருந்து எனக்கு சுடச்சுட இட்லிகள் கிடைக்கும். அவர் ஒரு கச்சிதமான குடும்பஸ்தன். நிறைய ஆண்தன்மை இருந்தாலும், மென்மையாக நடந்து கொள்வார்." என்றார்.