Ajith AK64
கோலிவுட் செய்திகள்

"ப்ரீ - புரொடக்சன்ஸ் நடக்கிறது, படத்திற்கான ஷூட்டிங்..." - AK 64 அப்டேட் சொன்ன ஆதிக் | Ajith

சினிமாவை தாண்டி அவருடைய பேஷனை, ரொம்ப இன்ஸ்பயர் ஆக இருப்பதாக எல்லோரும் பார்க்கிறோம். நடிகர் அஜித் சினிமாவை எந்த அளவு நேசிக்கிறாரோ அதே அளவு அவருடைய passion ஐயும் நேசிக்கிறார்.

Johnson

`த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து `AAA', `பஹீரா', `மார்க் ஆண்டனி' போன்ற படங்களை இயக்கினார். இதற்கு பின்பு அஜித்குமார் நடிப்பில் இவர் இயக்கிய `குட் பேட் அக்லி' படம் வெளியாகி பெரிய ஹிட்டானது. தற்போது மீண்டும் அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

தயாரிப்பாளர் சினிஷ் தன்னுடைய Soldiers Factory மூலம் தயாரிக்கும் `சூப்பர்ஹீரோ' மற்றும் `நிஞ்சா' படங்களின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்த படம் பற்றிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

Ajith

அவர் பேசுகையில் "அஜித் சாருடனான இந்த புதிய படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அந்த பொறுப்போடு வேலை செய்கிறோம். சினிமாவை தாண்டி அவருடைய பேஷனை, ரொம்ப இன்ஸ்பயர் ஆக இருப்பதாக எல்லோரும் பார்க்கிறோம்.

நடிகர் அஜித் சினிமாவை எந்த அளவு நேசிக்கிறாரோ அதே அளவு அவருடைய passion ஐயும் நேசிக்கிறார். இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறார் அஜித்" என்றவர் அஜித்தின் புதிய படம் குறித்த கேள்விக்கு, "ப்ரீ-புரொடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. படத்திற்கான ஷூட்டிங் இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது, பிப்ரவரியில் ஷீட்டிங் துவங்கும்" எனத் தெரிவித்தார்.