Vijay Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

ஜனநாயகன் படத்தில் கூடுதலாக இணைக்கப்பட்ட காட்சி? | Jana Nayagan | H Vinoth

படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. நேற்றிலிருந்து படம் ஜூலை 23ம் தேதி வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

Johnson

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசிப் படமாக உருவானது ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அது குறித்த பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு ஜூலை 9ம் தேதி CBFCயிலிருந்து இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.


படத்தின் தயாரிப்பு தரப்பு இதனை ஜூலை 11ம் தேதி அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. மேலும் இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் THE HONOURABLE CHIEF MINISTER OF TAMIL NADU C JOSEPH VIJAY எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பலரும் பகிர்ந்தனர்.  படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. நேற்றிலிருந்து படம் ஜூலை 23ம் தேதி வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

Jana Nayagan

இந்நிலையில் இப்படத்தின் இன்னொரு மாற்றம் பற்றிய தகவல்கள் சுற்றி வருகிறது. ஜூலை 9ம் தேதி வெளியான சான்றிதழில் இப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 11 வினாடிகள் என சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று ஜனநாயகன் படத்தில் கூடுதலாக 41 வினாடி காட்சி இணைக்கப்பட்டு புது சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இன்று காலையில் இருந்து பரவி வருகிறது. நடிகராக விஜய்க்கு இது கடைசி படம் என்பதால், அதற்கான சிறப்பு வீடியோ தான் படத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளதாக சொல்லாப்படுகிறது. மேலும் டைட்டில் கார்டிலும் முதலமைச்சர் விஜய் என வருமாறு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.