பாவனா தனது 90வது படமான 'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' படத்தில் 'சாரா' என்ற தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான பாவனா, 23 ஆண்டுகளாக திரையுலகில் திகழ்ந்து வருகிறார். ரியாஸ் மரத் இயக்கியுள்ள இந்த க்ரைம் திரில்லர் படத்தில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பாவனா. இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது அபாரமான நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ளது ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’.
ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் படத்தில் பாவனா, ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார்.
பாவனா நடிப்பில் உருவாகியுள்ள 90வது படமாக இடம்பெற்றுள்ளது ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’. `நம்மள்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான பாவனா, இப்போது 90 படங்களை கடந்துள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.