Mohini Ajithkumar
கோலிவுட் செய்திகள்

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்! | Ajithkumar | Mohini Mani

2023ம் ஆண்டு அஜித்தின் தந்தை சுப்பிரமணி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்து மெல்ல மீண்டு வந்த அஜித்தின் குடும்பத்தினர்.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை உயிரிழந்தார். 2023ல் தந்தை சுப்பிரமணியை இழந்த அஜித் குடும்பம் மீண்டும் துயரத்தில் மூழ்கியுள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். திரைப்படங்களில் நடிப்பது தாண்டி, இப்போது கார் ரேஸிங் மீது தீவிரமாக கவனத்தைத் திருப்பியிருக்கிறார். தற்போது ரேஸ் தொடர்பாக துபாயில் இருந்துவந்தார் அஜித். இந்த நிலையில் அஜித்தின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு காரணமாக இன்று  உயிரிழந்தார்.

அஜித்குமார்

2023ம் ஆண்டு அஜித்தின் தந்தை சுப்பிரமணி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்து மெல்ல மீண்டு வந்த அஜித்தின் குடும்பத்தினர். இந்த சூழலில் நேற்று அஜித்தின் தாயார் மோகினி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை மோசமாகவே இன்று காலை காலமானார்.

கடந்த சில தினங்களாக அஜித் துபாயில் இருந்தார். அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகின. தற்போது தாயாரின் இறுதிச்சடங்குகள் செய்வதற்காக துபாயில் இருந்து அஜித் சென்னை வந்து கொண்டிருக்கிறார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மோகினியின் இறுதிச் சடங்கு நாளை அஜித்தின் பாலவாக்கம் இல்லத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.