"ஷாலினி கையாளும் விஷயங்கள் ஏராளம், அவருடைய ஆதரவு இல்லையென்றால், இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது” என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித், தற்போது கார் ரேஸ் களத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பார்சிலோனாவில் நடைபெற்ற 24H endurance race கலந்து கொண்ட அஜித், அங்கு அளித்த பேட்டி ஒன்றில், தன் வாழ்க்கைத் துணையாக ஷாலினி எவ்வளவு முக்கியம் எனவும், தன் மகன் ஆத்விக்கின் ரேஸ் ஆர்வம் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.
”2002-இல் நான் திருமணம் செய்து கொண்டபோது, சிறிது காலம் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தேன். ஷாலினி ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் இருந்தார். பின்னர், குழந்தைகள் வந்தனர். பொறுப்புகள் அதனுடன் வருகின்றன. எனவே, அவர் பிஸியாகிவிட்டார். ஆனால் அவர் தொடர்ந்து மோட்டார் ஸ்போர்ட்ஸைப் பின்பற்றுகிறார். என் மகனும் அதை விரும்புகிறார். அவர் go-karting-ல் (சிறிய கார்களை வைத்து நடக்கும் போட்டி) கலந்து கொள்கிறார். ஆனால் இன்னும் தீவிரமாக இல்லை. அவர் உண்மையில் அதைத் தொடர விரும்புகிறாரா என்று முடிவு செய்ய நான் அவருக்கு நேரம் கொடுப்பேன்.
திரைப்படங்களானாலும் சரி, பந்தயமானாலும் சரி, என் கருத்துகளை அவர்கள் மீது திணிக்க நான் விரும்பமாட்டேன். அவர்கள் தாங்களாகவே முன்வரவேண்டும். அவர்களுக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஷாலினி கையாளும் விஷயங்கள் ஏராளம், அவருடைய ஆதரவு இல்லையென்றால், இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது.
நான் இல்லாதபோது குழந்தைகளையும், வீட்டையும் கவனித்துக்கொள்வது என்பது தியாகம் மட்டுமல்ல. குழந்தைகள் என்னைப் பார்ப்பது அரிது, அவர்கள் என்னை மிஸ் செய்வது போலவே நானும் அவர்களை மிஸ் செய்கிறேன். இவை ஒருபோதும் கவனிக்கப்படாத அல்லது புரிந்துகொள்ளப்படாத விஷயங்கள். ஆனால் நீங்கள் எதையாவது மிகவும் நேசிக்கும்போது, நீங்கள் உங்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும்" எனப் பேசி இருக்கிறார்.