சூர்யா 45 அப்டேட்ஸ் எக்ஸ் பக்கம்
சினிமா

சூர்யா 45 | த்ரிஷாவை தொடர்ந்து அடுத்தடுத்து இணைந்த பிரபலங்கள்.. அப்டேட் தந்த படக்குழு!

நடிகர் சூர்யாவின் 45வது படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர். அதுகுறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Prakash J

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதனை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். தொடர்ந்து படம் குறித்த அப்டேட்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில், இப்படத்தின் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்மாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து, படத்தில் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, நடராஜன் (நட்டி) மற்றும் ஷிவாதா நடிக்கவுள்ளதாக படக்குழு நேற்று தெரிவித்தது.

இந்த நிலையில், படத்தில் தெலுங்கு நடிகரான சுப்ரீத் ரெட்டி மற்றும் மலையாள நடிகையான அனகா மாயா ரவி இணைந்துள்ளதை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. சுப்ரீத் ரெட்டி பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.