ரெட்ரோ pt web
சினிமா

‘ரெட்ரோ’ | சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 44’ படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

அங்கேஷ்வர்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் படம் சூர்யா 44. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சூர்யா ஜோதிகாவின் 2D Productions, கார்த்திக் சுப்புராஜின் Stone bence நிறுவனமும் இணைந்து படத்தினை தயாரிக்கின்றன.

நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'சூர்யா 44' படக்குழு

படத்தின் அறிமுக வீடியோ கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ரெட்ரோ என்று பெயரிடப்பட்டுள்ளது.

2.16 நொடிகள் இருக்கும் டீசர் சூர்யா, பூஜா ஹெக்டேவிடம் பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இடையே படத்தின் பிற நடிகர்களின் சில காட்சிகள் வருகிறது. டீசரில், “காதலுக்காக நான் செய்துவரும் எல்லாவற்றையும் கைவிட்டு விடுகிறேன்.. காதல் மட்டுமே முக்கியம்” எனக் கூறி “கல்யாணம் செய்துகொள்ளலாமா?” என சூர்யா கேட்கிறார். இறுதியில் ‘ரெட்ரோ’ என்ற டைட்டிலுடன் டீசர் முடிகிறது.

டீசர் வெளியாகி ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.