ராகவா லாரன்ஸ் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் சிவலிங்கா படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படவுள்ளது.
இயக்குனர் பி.வாசுவுடன் ராகவா லாரன்ஸ் சிவலிங்கா படத்திற்காக முதல்முறையாக கைகோர்த்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங் நடித்துள்ளார். வாலு, மீகாமன், தில்லுக்கு துட்டு போன்ற படங்களுக்கு இசையமைத்த தமன் நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். புறா கொலைக்கு சாட்சி சொல்லும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த இப்படத்தின் தமிழ் பதிப்பில் வடிவேலு, ராதாரவி, பானுப்பிரியா, ஊர்வசி, ஜெய்பிரகாஷ், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புறா கொலைக்கு சாட்சி சொல்லும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் என்பதால் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.