வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படம் சத்யஜோதி தயாரிப்பில் தொடங்க திட்டமிடப்பட்டாலும், காரணமறியாமல் தாமதமாகி டிராப் ஆனது. கங்கை அமரன் குறிப்பிட்ட ‘ஹிட் ஆன நடிகர் கால் ஷீட் மாற்றம்’ விவகாரம் நெட்டிசன்களை சிவகார்த்திகேயனை நோக்கி குறிய வைத்தது. இதனால் விமர்சனங்கள் கிளம்ப, வெங்கட்பிரபு எந்த பிரச்னையும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் திரைப்படம் உறுதியாகியிருந்தது. அதனாலேயே வெங்கட்பிரபு இயக்கிய GOAT படத்தில் விஜயு உடன் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதற்கு அடுத்து உடனடியாக வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன் இணையும் படம் துவங்க இருந்தது. இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தனர். அதற்கான வேலைகளும் நடந்தன. ஆனால் சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு துவங்காமல் நிறுத்தப்பட்டது. அதற்குபிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் சென்றுவிட்டார்.
இந்தசூழலில் தான் ஏன் வெங்கட்பிரபுவின் அடுத்தபடம் தாமதாகிறது என்ற கேள்விக்கு பதிலளித்திருந்த கங்கை அமரன், ”கதை எல்லாம் தயார் செய்து, கால் ஷீட்டும் அளித்தபிறகு சம்பந்தப்பட்ட நடிகரின் திரைப்படம் ஒன்று ஹிட்டானது. அதனால் அந்த இயக்குநருடன் இரண்டு திரைப்படங்களில் பணியாற்றிவிட்டு தான் வருவேன் என சொல்லிவிட்டார். நானும் என் மகனை உன்னை மதிக்காத இடத்திற்கு ஏன் சென்று அலைகிறாய், அது நம் குடும்பத்துக்கு தான் அவமானம்” என்று கூறிவிட்டேன் என பேசியிருந்தார்.
இந்நிலையில் தான் அது சிவகார்த்திகேயன் தான் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்ட நிலையில், சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது, எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என வெங்கட்பிரபு விளக்கம் கொடுத்துள்ளார்.
வெங்கட் பிரபுவின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது ரிப்ளை செய்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவின் படி வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இணைந்த திரைப்படம் முழுவதும் ரத்துசெய்யப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் எக்ஸ் தள பதிவில், “சார், நாம் ஒரு குடும்பம், அதனால் நீங்கள் இவ்வளவு தீவிரமாக பதிலளிக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, உங்கள் அடுத்த படைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நான் இதை ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன், நான் எப்போதும் வெங்கட் பிரபுவின் ரசிகனாக இருப்பேன், விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்" என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் ஏற்கனவே இருவரும் செய்யவிருந்த திரைப்படம் டிராப் செய்யப்பட்டதாக நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர்.