\
Venkat Prabhu - sivakarthikeyan
Venkat Prabhu - sivakarthikeyanx

சிவகார்த்திகேயன் உடன் பிரச்னையா? வெங்கட்பிரபு போட்ட ஒரே பதிவு.. முடிவுக்கு வந்த சர்ச்சை!

சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு இல்லை என வெங்கட்பிரபு விளக்கம்; நட்பு உறவு தொடரும் என சமூக வலைதளத்தில் பதிவு
Published on: 
Summary

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படம் தாமதமானது குறித்து கங்கை அமரன் கூறிய பேட்டி, SK திட்டத்தை விட்டு விலகினார் என்ற சர்ச்சையை கிளப்பியது. இதனால் சமூக வலைதளங்களில் SK மீது நெகட்டிவ் கருத்துக்கள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெங்கட்பிரபு, SK மீது எந்த மனக்கசப்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் உருவாவதாக இருந்தது. விஜயை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய GOAT படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதற்கு அடுத்து வெங்கட்பிரபு - சிவா படம் துவங்க இருந்தது. இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தனர். இப்படத்துக்காக அமெரிக்க சென்று 3D visual effectsக்கு தேவையான scanning and look-transformation testsஐ கூட சிவகார்த்திகேயனை வைத்து செய்யப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இப்போது சிவா அடுத்து சேயோன் படத்திலும், ராம்குமார் பால கிருஷ்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.

Siva karthikeyan
Siva karthikeyan ANI

இந்த சூழலில் பிரபல இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் ஏன் தாமதமாகிறது என்பது குறித்து பேசி இருந்தார். அதில் "வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தள்ளிப்போனதற்குக் காரணம், ஒரு ப்ராஜெக்ட்டை நம்பியிருந்ததுதான். அந்த நடிகர் யாரென்று சொல்லி அவரை குறை சொல்ல விரும்பவில்லை, அவர்கள் வாழட்டும்.

கதை எல்லாம் தயார் செய்து, கால் ஷீட்டும் அளித்தார்கள். அமெரிக்க சென்று படத்துக்கான பணிகளையும் செய்துவிட்டார்கள். இடையில் அந்த நடிகரின் திரைப்படம் ஒன்று ஹிட்டான பிறகு, அந்த இயக்குநருடன் இரண்டு திரைப்படங்களில் பணியாற்றிவிட்டு அதன் பின்தான் வருவேன் என சொல்லி இருக்கிறார்.

இந்த விவரங்களை பிரபுவிற்கு அனுப்பி, ‘உனக்கு இதெல்லாம் உண்மையிலேயே தேவையா? அந்த நடிகர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், உனது படத்தில் அவரை நடிக்க வைக்க நீ இந்த அளவிற்குச் சென்று அவரிடம் கெஞ்ச வேண்டுமா? இது நம் குடும்பத்திற்கு அவமானம் இல்லையா? அவர் உன்னைப் புறக்கணிக்கிறார், எனவே நீயும் அவரைப் புறக்கணித்துவிட்டு, அவரது படத்தை எடுக்கக் கூடாது' என்று கூறினேன்" எனக் கூறி இருந்தார்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக சிவகார்த்திகேயன் தான் அந்த நடிகர், வெங்கட்பிரபு படத்திலிருந்து அவர் விலகிவிட்டார் என பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை இட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. அப்பதிவில் "SK எனக்கு எப்போதும் ஒரு நெருங்கிய நண்பர் மற்றும் சகோதரர் போன்றவர். பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தொடங்கப்படாமல் போனது. அவ்வளவுதான்.

இதில் எந்த மனக்கசப்பும் இல்லை. சரியான நேரம் அமைந்து, ஒரு நல்ல கதைக்களம் அமைந்தால், SK-வுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்புவேன். எனவே தயவுசெய்து, இவை அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். நான் எனது அடுத்தடுத்த பணிகளில் மும்முரமாக இருக்கிறேன். என் சகோதரரின் சேயோனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் SK பற்றி நெகட்டிவ் கருத்துக்கள் பரவி வந்த நிலையில் வெங்கட்பிரபுவின் இந்தப் பதிவு அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது

Venkat Prabhu - sivakarthikeyan
’இன்னும் 10 வருஷத்துல..’ எதுக்காக இந்த வசனம் வச்சீங்க? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com