சிவகார்த்திக்கேயன் ANI
சினிமா

சோசியல் மீடியாவில் நெகடிவ் கமெண்ட்.. சிவகார்த்திகேயன் அளித்த விளக்கம்!!

சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறையான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது குறித்து நடிகர் சிவகார்த்திக்கேயன் விளக்கமளித்துள்ளார்.

Premkumar S

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், சேயோன் என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதற்கான, படபிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிய சிவகார்த்திக்கேயனிடம், சமூக வலைதளங்களில் வரும் ட்ரோல்களையும், எதிர்மறையான கருத்துக்களையும் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள அவர், ”நான் அதைப் பார்ப்பதே இல்லை.. எனக்கு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்டுகள் உள்ளன. ஆனால் அனைத்தையும் என் டீம்தான் ஹேண்டில் செய்கிறது. நான் நேரடியாக எதையும் படிப்பதில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இரண்டு படங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். மேலும், இரண்டு ஸ்கிரிப்ட்களும் பணி நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், மூன்று படங்கள் புரொடக்ஷனுக்காக லாக் செய்யப்பட்டுள்ளன. எனவே, என் மனதில் 7 கதைகள் உள்ளன.எனக்கு குடும்ப நேரமும் இருக்கிறது.

நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்கிறோம். அந்த கமெண்ட்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினால், என் இரண்டு வயது மகனுடன் கூட பேச முடியாது. எனது நண்பர்களுக்காகவும், எனக்காகவும், ரசிகர்களுக்காகவும் நேரம் இருக்கிறது. என்னைச் சுற்றி இத்தனை நேர்மறையான விஷயங்கள் இருக்கும்போது, முகம் தெரியாத ஒரு அறியாத நபரின் கமெண்ட் என்னை எப்படி பாதிக்கும்?” எனத் தெரிவித்துள்ளார்.