சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றத் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தின், இரண்டாம் பாகம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகியிருக்கிறது. ஜெயிலர் 1-ஐ போலவே ஜெயிலர் 2 திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த, 6 நாட்களில் மட்டும் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், "அவன் எடுத்தது யானையும் இல்ல, வெட்டுனது ராஜாவும் இல்ல, ஆனா எவ்ளோ confident-ஆ சொல்லிட்டு நடந்து போறான் பாரு..." என்ற வசனமும், பழக்கட மூர்த்தி என்ற கதாபாத்திரமும் தற்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்துவருகிறது. இந்தச்சூழலில் தான், பலரும் ஜெயிலர் 2 திரைப்படத்தைப் பற்றி பேசுவதுடன் மூர்த்தி கதாப்பாத்திரம் குறித்தும் பாராட்டி வருகின்றனர்.
இந்தச்சூழலில் தான், ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சசிக்குமார், அந்தப் படம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் பேசியிருந்தாலும், ”எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்” எனத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக, ஜெயிலர் திரைப்பட வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் நெல்சனுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் கார் பரிசளித்திருந்தார். அந்தவகையில்,, இந்திய அளவில் டிரெண்டிங் ஆன பழக்கடை மூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்த நமோ நாராயணாவுக்கு கார் வழங்க வேண்டும் என நகைச்சுவையாக பதிவிட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.