rajinikanth jailer 2
சினிமா

வெறும் 2 நாளில் 200 கோடி வசூல்! ரஜினியின் 1000 கோடி சம்பவம் ரெடி.. திரையில் மிரட்டும் ஜெயிலர் 2!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் 2 நாட்களில் 200 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Rishan Vengai

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் 2 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்து, முதல் 1000 கோடி திரைப்படமாக மாறும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், குடும்பத்தோடு பார்க்கும் காமெடி கலாட்டா மற்றும் பாட்ஷா டெம்ப்ளேட் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

உலகளவில் வசூலில் ₹100 கோடி மைல்கல்லை எட்டிய முதல் தென்னிந்திய நடிகர், இந்தியாவை கடந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பாக்ஸ் ஆபீஸ் டிரேட் மார்க்கை செட்செய்த தென்னிந்திய நடிகர், உலகளவில் அதிக 500 கோடி திரைப்படங்கள் கொடுத்த தென்னிந்திய நடிகர் என தமிழ்சினிமாவை உச்சத்தில் கொண்டுசென்று வைத்த பெருமை ரஜினிகாந்த் என்ற ஒற்றை மனிதருக்கே சேரும்.

rajinikanth

ஆனால் தற்போது ரஜினிகாந்த் செட்செய்த வர்த்தக மைல்கல்லை கடந்திருக்கும் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாத்துறை ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கொடுத்த தென்னிந்திய சினிமாத்துறையாக முன்னணியில் இருக்கின்றன. பாக்ஸ் ஆபிஃஸ்க்கு முன்னோடியாக இருந்த தமிழ்சினிமா, முதல் ஆயிரம் கோடி படத்தை கொடுக்க போராடிவருகிறது. பாலிவுட்டில் 5, ஆயிரம் கோடி படங்களும், தெலுங்கு டோலிவுட்டில் 4, ஆயிரம் கோடி படங்களும், கன்னட சாண்டல்வுட்டில் ஒரு ஆயிரம் கோடி படமும் இருக்கின்றன. இன்னும் தமிழ்சினிமா தங்களுடைய முதல் ஆயிரம் கோடி திரைப்படத்திற்காக காத்திருக்கிறது.

Jailer 2

இந்தசூழலில் தான் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகி 2 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துவரும் ஜெயிலர் 2 திரைப்படம் ஆயிரம் கோடியை எட்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. 2023ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், மோகன்லால், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, ஜாக்கி ஷரஃப், ரித்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகிபாபு, சுராஜ், நமோநாரயணா உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Jailer 2

2 நாட்களுக்கு முன் திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் பாசிட்டிவான வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் பாட்ஷா பட டெம்ப்ளேட் உடன் உருவாக்கப்பட்டிருந்த இப்படம், காமெடி கலாட்டாவுடன் குடும்பத்தோடு பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருப்பது பெரிய பூஸ்ட்டாக அமைந்துள்ளது. இதனால் திரைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தசூழலில் 2 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலின் படி 2 நாட்களில் இந்தியாவின் மொத்த வசூல் 112.10 கோடியாகவும், உலகளாவிய மொத்த வசூல் 209.10 கோடியாகவும் பட்டையை கிளப்பியுள்ளது. விடுமுறை நாட்கள் வருவதால் அடுத்த 3-4 நாட்களில் படம் 500 கோடியை எளிதாக எட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் முதல் 1000 கோடி வசூலை ஈட்டக்கூடிய வாய்ப்பு ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு இருப்பதாக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இது சாத்தியமானால் 75 வயதில் இந்த மேஜிக்கை நிகழ்த்திய ஒரே நடிகராக ரஜினிகாந்த் வரலாறு படைப்பார்.