ramayana ramayana part 1
சினிமா

4 நாட்களில் ரூ.500 கோடி.. உலக Box officeஐ அதிர வைத்த ராமாயணா!!

தீபாவளி விடுமுறை மற்றும் நேர்மறை விமர்சனங்கள் வசூல் உயர்வுக்கு காரணம்.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ராமாயணம் திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் உலகளவில் ரூ500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.238.85 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 5ஆம் தேதி வெளியானது. படத்திற்கு கிடைத்துவரும் நேர்மறையான விமர்சனங்களும், தீபாவளி தொடர் விடுமுறையும் வசூல் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

Sai Pallavi

திரைப்பட வசூலைக் கண்காணிக்கும் Sacnilk வெளியிட்டுள்ள தகவலின்படி, நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் இந்தியில் வெளியாகியிருக்கும் ராமாயணா ரூ56.15 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த வசூல் ரூ285.20 கோடியாகவும் , நிகர வசூல் ரூ238.85 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வெளிந்டுகளி ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ45 கோடி வசூலித்துள்ளது. இதனால் உலகளாவிய மொத்த வசூல் ரூ.499 கோடியைக் கடந்துள்ளது.

சென்னையில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 85 காட்சிகளில் 89.8 சதவீத பார்வையாளர்கள் வருகையைப் பதிவு செய்துள்ளது. பெங்களூருவில் 86.5 சதவீதமும், ஹைதராபாத்தில் 55.3 சதவீதமும் பார்வையாளர்கள் வருகை பதிவாகியுள்ளது.

சுமார், ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் 2 பாகங்களாக உருவாகியுள்ள ராமாயணம், 2026ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் 2028ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.