Ramayana Ramayana Trailer you tube Screenshot
சினிமா

வசூலில் புதிய வரலாறு படைக்கிறதா ராமாயணம்? 7 நாளில் மெகா சாதனை!

உலக அளவில் ரூ.900 கோடியைக் கடந்து சாதனை... 7 நாட்களில் மாஸ்!

PT WEB

செய்தியாளர் - M.மீரா

நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணம்: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம், வெளியான 7 நாட்களிலேயே இந்தியாவில் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் இப்படத்தின் வசூல் ரூ.934 கோடியைத் தாண்டியுள்ளது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இந்தியாவில் ரூ.64.85 கோடி வசூலித்தது. இரண்டாவது நாளில் வசூல் ரூ.48.05 கோடியாகக் குறைந்தாலும், சனிக்கிழமை ரூ.69.80 கோடியாக அதிகரித்தது.

ramayana

ஞாயிற்றுக்கிழமை ரூ.56.15 கோடி வசூலித்த நிலையில், திங்கட்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் வசூல் எகிறியது. ஐந்தாவது நாளில் மட்டும் சுமார் 91.5 சதவீதம் அதிகரித்து ரூ.107.50 கோடி வசூலித்தது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ரூ.94.10 கோடியும், புதன்கிழமை ஏழாவது நாளில் ரூ.70.65 கோடியும் வசூலித்துள்ளது.

வெளியான முதல் வாரத்திலேயே ரூ.900 கோடியைக் கடந்துள்ள இப்படம், விரைவில் ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் இப்படத்தின் மொத்த நிகர வசூல் ரூ.511.10 கோடியாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.934.55 கோடியாக உள்ளது.

Ramayana

சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.