Ram Charan Chiranjeevi
சினிமா

ராம் சரணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்! - மகிழ்ச்சியை பகிர்ந்த தாத்தா சிரஞ்சீவி

அளவற்ற மகிழ்ச்சியுடனும், நன்றியால் நிரம்பிய மனதுடனும், ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Johnson

சிரஞ்சீவி குடும்பத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியை தாத்தா சிரஞ்சீவி பகிர்ந்துள்ளார். ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு ஜனவரி 31ம் தேதி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

தெலுங்கு சினிமாவின் ஆளுமை மிக்க குடும்பம் சிரஞ்சீவியுடையது. இப்போது அந்த வீட்டில் இரு குட்டி நட்சத்திரங்கள் இணைந்துள்ளது. நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா கோனிடேலா தம்பதிக்கு ஜனவரி 31ம் தேதி ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இதன் பொருட்டு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள் சிரஞ்சீவி குடும்பத்தார். குடும்ப தலைவரான சிரஞ்சீவி தனது அளவற்ற மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சமூக வலைதளங்களில் நேரடியாக இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த சிரஞ்சீவி "எங்கள் நலனை எப்போதும் விரும்பும் ரசிகர்களுக்கு இந்த செய்தியை  பகிர்ந்து கொள்ள விரும்பினோம். அளவற்ற மகிழ்ச்சியுடனும், நன்றியால் நிரம்பிய மனதுடனும், ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தாயும் குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். கடவுள் அருளால், அனுமனின் அருளாலும் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்” என்று பேசினார்.

ராம் சரண் மற்றும் உபாசனா தங்களது முதல் குழந்தையாக மகள் க்ளின் காரா கோனிடேலாவை ஜூன் 20, 2023 அன்று வரவேற்றனர். தற்போது இரட்டைக் குழந்தைகளின் வருகை நிகழ்ந்துள்ளது. பலரும் இந்த தம்பதிக்கு குடும்பத்துக்கும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.