SUPER STAR RAJINIKANTH  X SUNPICTURES
சினிமா

எதிர்பார்ப்பை எகிறவிடும் ’JAILER 2’.. ரூ.1,000 கோடியை எட்டுமா? SILENT சம்பவம் செய்த அனிருத்!

ரஜினியின் ’Jailer 2’ படத்தின் முன்பதிவு வசூல்முதல் இசைவரை எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், படம் ₹1,000 கோடி வசூலை எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

PT WEB

செய்தியாளர் : வெற்றிசெல்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’Jailer 2’ ரிலீஸுக்கு முன்பே, பாக்ஸ் ஆபீஸ் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முன்பதிவு வசூல்முதல் அனிருத்தின் ஸ்பெஷல் ட்வீட்வரை, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

RAJINIKATH AND NELSON DILIPKUMAR

உலகளவில் அப்படத்தின் முன்பதிவு வசூல் 50 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் நாளில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலை ’Jailer 2’ எட்டலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் முந்தைய படமான ’Coolie’ முதல் நாளில் சுமார் 151 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், அந்த ஓப்பனிங் சாதனையை ’Jailer 2’ முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்திருக்கிறது. முதல் நாள் வசூலைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக 1,000 கோடி ரூபாய் வசூலை எட்டும் படமாக ’Jailer 2’ உருவெடுக்குமா என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், படத்தில் இடம்பெற்றிருக்கும் Silent சம்பவம் குறித்த பேச்சு கவனம் ஈர்த்திருக்கிறது.’ Jailer 2’-ல் நடித்துள்ள Bjorn, படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் SILENT சம்பவம் இருப்பதாக சூசகமாகக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதனால், அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

ANIRUDH TWEET

ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் ஒருபடி மேலே கொண்டு சென்றிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.. 76 வயதிலும் 51 ஆண்டுகளாகத் திரையுலகில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ரஜினிகாந்த் இன்றும் தனது ஸ்டைலாலும் திரை ஆளுமையாலும் வரலாறு படைத்து வருவதாக அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நாளை ’Jailer 2’ திரையரங்குகளில் வெளியாகும்போது, ஒவ்வோர் இந்தியரின் இதயத்திலும் வாழும் ரஜினிகாந்த் மீதான அன்பை உலகமே மீண்டும் பார்க்கும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ’ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே தலைவர்’ என்ற ரஜினி ரசிகர்களின் உணர்வை நினைவுபடுத்தும் வகையில் அனிருத் பதிவிட்டிருப்பது, படத்தின் ரிலீஸ் ஹைப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.