உலகில் மிகப்பிரபலமான இணையதளம் Rotten Tomatoes. திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் விமர்சனங்கள் மற்றும் சிறந்த பட பட்டியல்களை வெளியிடும் இந்த தளம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்று. இப்போது இந்த தளம் உலகில் உள்ள பல மொழி சினிமாக்களில் 3 மணிநேரம் மற்றும் அதற்கு அதிகமான நீளம் கொண்ட சிறந்த 100 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மூன்று இந்தியப் படங்கள் இடம்பெற்றுள்ளன. அனுராக் காஷ்யப் இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், நவாசுதீன் சித்திக் நடிப்பில் 2012ல் வெளியான இந்திப் படம் `Gangs of Wasseypur' 79வது இடத்தில் இருக்கிறது. ஆமீர்கான் நடிப்பில் அஷுதோஷ் கோவேர்கர் இயக்கத்தில் 2001ல் வெளியான இந்திப் படம் `Lagaan: Once Upon a Time in India' படம் 13வது இடத்தில் இருக்கிறது.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்து 2022ல் வெளியான தெலுங்குப் படம் `RRR' பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் மிகச்சிறந்த படமாக முதல் இடத்தை பிடித்திருப்பது, அகிரா குரோசாவா இயக்கிய உலகப்புகழ் பெற்ற `Seven Samurai' படம் இடம்பெற்றுள்ளது.