pushpa 2 hindi collection PT
சினிமா

அடேங்கப்பா..! இதுவரை இந்தி படங்களே செய்யாத வசூல்.. பாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸில் வரலாறு படைத்த புஷ்பா 2!

பாலிவுட் சினிமாவில் இதுவரை இந்தி மொழி படங்களே செய்யாத அதிகபட்ச வசூலை படைத்து, இந்தியில் மட்டும் ரூ.632 கோடியை வசூல் ஈட்டி வரலாறு படைத்துள்ளது புஷ்பா 2 திரைப்படம்.

Rishan Vengai

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டிருந்த திரைப்படத்தில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.

படத்தில் நடித்திருந்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்த நிலையில், மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற புஷ்பா 1 திரைப்படம் வசூலில் ரூ.390 கோடிவரை ஈட்டி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியானது.

புஷ்பா 2

புஷ்பா 1 திரைப்படத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் அதிகப்படியான வரவேற்பை சினிமா ரசிகர்கள் வழங்கியுள்ள நிலையில், படம் வெளியான 15 நாட்களில் உலகளவில் 1500 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. நிறைய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டப் போதும், பல சிக்கலில் அல்லு அர்ஜுன் மாட்டியபோதும் வசூலில் மந்தமே இல்லாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது புஷ்பா 2.

இத்திரைப்படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகும் வசூல் பாதிக்கும் என செய்திகள் பரவிய நிலையில், 56 நாட்களை கடக்காமல் புஷ்பா 2 ஒடிடி தளத்தில் வெளியாகாது எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியில் மட்டும் வரலாற்று சாதனை படைத்த புஷ்பா 2..

இதுவரை எந்த இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை படைத்த புஷ்பா 2 திரைப்படம், தற்போது பாலிவுட் சினிமாவில் இந்தி படங்களே எதுவும் செய்யாத வசூல் சாதனையை புஷ்பா 2 திரைப்படம் செய்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது இந்தியில் மட்டும் அதிகபட்ச வசூல் சாதனை செய்த , ஸ்ட்ரீ 2 (Stree 2) ரூ.597.99 கோடி, சாருக் கானின் ஜவான் ரூ.582.31 கோடி மற்றும் பதான் ரூ.524.24 crore முதலிய டாப் 3 இந்தி படங்களின் வசூலை முறியடித்த புஷ்பா2 திரைப்படம் இந்தியில் மட்டும் 15 நாட்களில் ரூ.632.50 கோடி வசூலை ஈட்டி வரலாறு படைத்துள்ளது.

படம் உலகளவில் 1500 கோடியை கடந்து வெற்றிநடை போட்டுவருகிறது.