பிரபாஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் `சீதா ராமம்' புகழ் ஹனு ராகவப்புடி. இப்படத்தின் அப்டேட் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
நாளை காலை 11.07 மணிக்கு இப்படத்தின் TITLE TEASE மற்றும் பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 23ஆம் தேதி காலை 11.07 மணிக்கு TITLE POSTER வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர் படக்குழு. இப்படத்திற்கு Fauji என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை. எனவே நாளை படத்தின் டைட்டில் தெரிந்துவிடும்.
பிரபாஸ் நடித்துள்ள `தி ராஜா சாப்' ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ’சலார் 2’ மற்றும் ’கல்கி 2’ போன்ற படங்களில் இருந்து ஏதாவது அறிவிப்பு வருமா என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.