Singer Krishnaraj Singer Krishnaraj
சினிமா

‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து, தாயே திரிசூலி..’ பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பாடகரான கிருஷ்ணராஜ் தன்னுடைய 75வது வயதில் காலாமானார்.

Rishan Vengai

பிரபல பாடகர் கிருஷ்ணராஜ், தேவா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர், தேவா மறைந்த சில நாட்களில் காலமானார். அவரது மறைவு தமிழ்திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

தேனிசைத் தென்றால் தேவா மறைவில் அதிகமாக நினைவுகூறப்பட்ட பாடல் என்றால் அது தஞ்சாவூரு மண்ணுஎடுத்து பாடல் தான். தேவா மறைந்த சில நாட்களில் அந்தப் பாடலை பாடிய பிரபல பாடகரான கிருஷ்ணராஜும் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் கிருஷ்ணராஜ் தேவாவின் படத்தில் அறிமுகமானதோடு, பெரும்பாலான பாடல்களை தேவாவின் இசையில்தான் பாடியுள்ளார். தேவா-கிருஷ்ணராஜ் கூட்டணியில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து, நாலுவார்த்த பேசலயே, மருமகனே, காத்தடிக்குது, நலம் நலமறிய ஆவல், வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, ஆனா ஆவன்னா, நகுமோ ஏ சுகமோ, சோக்கு சுந்தரி, மீசக்கார நண்பா, பாட்டுக்கு பாலைவனம், எந்தன் உயிரே, ராசவே என்னை தெரியலயே’ என பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் தாயே திரிசூலி, காதல் பண்ணாதீங்க, நீ பார்த்துட்டு போனாலும், தங்கச்சி என் தங்கச்சி போன்ற பாடல்களும், 2000-களுக்குப் பின் பருத்திவீரனில், 'அய்யயோ' கழுகு திரைப்படத்தில், 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்' ஆகிய பாடல்களைப் பாடி அசத்தினார். இறுதியாக, சூரரைப் போற்று திரைப்படத்தில் நாலு நிமிஷம் பாடலைப் பாடியிருந்தார்.

இந்தசூழலில் மூத்த பாடகர் கிருஷ்ணராஜின் இழப்பு தமிழ்த்திரையுலகிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.