சினிமா

அம்மாவுடன் வந்ததால் அப்செட் ஆனார் தயாரிப்பாளர்: பூனம் கவுர் பரபரப்பு புகார்

அம்மாவுடன் வந்ததால் அப்செட் ஆனார் தயாரிப்பாளர்: பூனம் கவுர் பரபரப்பு புகார்

webteam

தமிழில், நெஞ்சிருக்கும் வரை, பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உட்பட சில படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கு நடிகையான இவர் மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார். இப்போது வாய்ப்பு அதிகம் இல்லாததால் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். 

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் போக்கு பற்றி பேசினார். சினிமாவில் நடிகைகளுக்கு இதுபோன்ற தொல்லைகள் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட அவர், தயாரிப்பாளர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

அவரது பெயரைக் குறிப்பிடாமல் பேசிய பூனம் கவுர், ‘முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர், நான் நடித்த சில படங்களைப் பார்த்து விட்டு என்னை புகழ்ந்தார். சிறப்பாக நடித்திருப்பதாகவும் தனது அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும் மாறும் சொன்னார். முன்னணி ஹீரோ படங்களில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்றும் சொன்னார். அவர் சொன்ன நாளில் என் அம்மாவுடன் அவர் அலுவலகம் சென்றேன். இதைக் கண்டதும் அவர் முகம் மாறியது. என் அம்மாவுடன் வந்ததை அவர் விரும்பவில்லை. தனியாக வந்திருப்பேன் என்று நினைத்தார். இதனால் என்னிடம் சரியாகக் கூட பேசவில்லை. பிறகு சம்பிரதாயத்துக்குப் பேசிவிட்டு, திரும்பிவிட்டேன். பிறகு இதுவரை அவர் வாய்ப்பு தந்ததே இல்லை. நடிகர்களைப் போல் அல்லாமல் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க வேண்டும்’ என்று கூறினார்.

ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி பரபரப்பு புகார் கூறிவரும் நிலையில், நடிகை பூனம் கவுரும் இப்படி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.