ராம் சரண், புச்சி பாபு சனா கூட்டணியில் உருவாகும் ‘பெத்தி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2024 நவம்பரில் தொடங்கிய படப்பிடிப்பு, ராம் சரண் காயம் காரணமாக தாமதமடைந்தது. தற்போது அவர் உடல்நிலை சீராகி, மீண்டும் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இன்னும் 6 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் மாத வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
ராம் சரண் நடிப்பில் புச்சி பாபு சனா இயக்கிவரும் படம் `பெத்தி'. ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, பொம்மன் இராணி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.
2024ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படம் முதலில் இந்தாண்டு மார்ச் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பட வேலைகள் நிறைவடையாததால் ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் ஒரு சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் ராம்சரணுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நின்றது. எனவே படம் இப்போது ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்போது ராம்சரனுக்கு உடல்நிலை சீராகிவிட்டது எனவும், படப்பிடிப்பு துவங்கிவிட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 6 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருக்கிறது அதை முடித்துவிட்டால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும். அது முடிந்த பின் ஜூன் மாதம் எந்த தேதியில் படம் வெளியாகும் என்பது அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. RRR படத்துக்கு பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான `Game Changer' எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே இந்தப் படத்தின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.