பாலிவுட்டில் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகராக வலம் வருபவர் பரேஷ் ராவல். சிறந்த வில்லன், காமெடியன் என அனைத்து கதாப்பாத்திரங்களும் திறம்படா நடிப்பவர்.
பாலிட் அல்லாது, தெலுங்கு ,தமிழ் என பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர், இரண்டு ஆண்டுகள் அடுத்தடுத்து தேசிய விருதை வரிசையாக வென்றுள்ளார். தமிழ் மொழியில், சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் மெயின் வில்லன் இவர்தான்.
இந்தநிலையில்தான், இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைராலான நிலையில், இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதில், "ஒரு படத்தின் ஷூட்டிங்கில் எனக்கு காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்த சமயம் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் என்னை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். சிறுநீரை குடித்தேன்: அவர் என்னிடம் சீக்கிரம் குணமடைய வேண்டுமென்றா உன்னுடைய சிறுநீரை நீயே குடி என்றும்; மது, சிகரெட், அசைவம் ஆகியவைகளை தவிர்த்துவிடு என்றும் கூறினார். அவர் சொன்னபடியே தினமும் காலை எழுந்ததும் என்னுடைய சிறுநீரை பீர் குடிப்பது போல் ஒரே மூச்சாக குடித்துவிடுவேன்.
15 நாட்கள் தொடர்ந்து நான் அப்படி செய்துவந்தேன். பிறகு மருத்துவர்கள் என்னுடைய எக்ஸ்ரேவை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். விரைவிலேயே குணமடைந்துவிட்டேன். அதாவது டிஸ்சார்ஜ் ஆக இரண்டு மாதங்கள் என்று சொன்னார்கள். ஆனால் நான் ஒன்றரை மாதங்களிலேயே டிஸ்சார்ஸ் ஆகிவிட்டேன்" என்று தெரிவித்திருந்தார்
இவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியநிலையில், மருத்துவர்கள் பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். சிறுநீரை குடிப்பதால், உடல்நலம் பெறலாம் என்று எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இதனால், உடல்நலனில் பாதிப்புதான் உண்டாகும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.