இந்த வார ஓடிடி ரிலீஸ் புதிய தலைமுறை
ஓடிடி திரைப் பார்வை

Squid Game: S2 | சொர்க்கவாசல் | அலங்கு | Baby John | ராஜாக்கிளி | இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

சொர்க்கவாசல், அலங்கு, Baby John, ராஜாக்கிளி என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Johnson

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Series

What If…?: S3 (English) Hotstar - Dec 22

What If S3

Bryan Andrews and Stephan Franck மூன்றாவது சீசனாக வெளியாகவுள்ள `What If…?' ஐ இயக்கியுள்ளனர். ஒருவேளை இப்படி நடந்தால் என்ற மார்வல் கற்பனைகளின் அனிமேஷன் வடிவம்தான் கதை.

Squid Game: S2 (English) Netflix - Dec 26

Squid Game: S2

Hwang Dong-hyuk இயக்கிய சீரிஸ் `Squid Game'. மிகப்பெரிய ஹிட்டான இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. இம்முறை என்ன டெரர் விளையாட்டுகள் வருகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Doctors (Hindi) Jio Cinema - Dec 27

Doctors

ஷரத் கேல்கர் நடித்துள்ள சீரிஸ் `Doctors'. மும்பையில் உள்ள பேக்வெல் மெடிக்கல் சென்டரில் நடக்கும் சம்பவங்களே கதை.

Khoj – Parchaiyon Ke Uss Paar (Hindi) Zee5 - Dec 27

Khoj Parchaiyon Ke Uss Paar

Anupriya Goenka, Sharib Hashmi, Aamir Dalvi நடித்துள்ள சீரிஸ் `Khoj – Parchaiyon Ke Uss Paar'. வேத் தனது தொலைந்து போன மனைவி மீராவை தேடும் முயற்சியில், அறிந்து கொள்ளும் உண்மைகளே கதை.

OTT

RRR Behind and Beyond (English) Netflix - Dec 27

RRR Behind and Beyond

ராஜமௌலி இயக்கிய RRR படம் உருவான விதம் முதல், ஆஸ்கர் வென்றது வரையிலான பயணத்தை பதிவு செய்கிறது இந்த ஆவணப்படம்.

Post Theatrical Digital Streaming

Panchayat Jetty (Malayalam) manorama MAX - Dec 24

Panchayat Jetty

மணிகண்டன் - சலீம் இயக்கியுள்ள படம் `Panchayat Jetty'. குடுங்கச்செரி மக்கள் பஞ்சாயத்தை எதிர்த்து போராடுகிறார்கள். ஏன்? எதற்கு? என்பதே கதை

Bhairathi Ranagal (Kannada) Prime - Dec 25

நாரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்த படம் `Bhairathi Ranagal’. 2017ல் வெளியான மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவாகியிருக்கிறது படம்.

Sorgavaasal (Tamil) Netflix - Dec 27

Sorgavaasal

சித்தார்த் விஷ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, செல்வராகவன் நடித்த படம் `சொர்க்கவாசல்’. சிறைச்சாலையில் நடக்கும் ஒரு சம்பவமே கதை.

Thaanara (Malayalam) Prime - Dec 27

Thaanara

ஹரிதாஸ் இயக்கியுள்ள படம் `Thaanara'. எம் எல் ஏவான தனது கணவனை ஒரு காவலதிகாரியின் துணையோடு கண்காணிக்கிறாள் மனைவி. இதில் தெரிய வரும் உண்மைகளே கதை.

Bhool Bhulaiyaa 3 (Hindi) Netflix - Dec 27

Bhool Bhulaiyaa

அனீஸ் பஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், த்ரிப்தி இம்ரி, வித்யா பாலன், மாதுரி தீக்‌ஷித் நடித்த படம் `Bhool Bhulaiyaa 3'. இம்முறை எப்படி பேயோட்டுகிறார்கள் என்பதே கதை.

Mothers’ Instinct (English) Lionsgate Play - Dec 27

Mothers’ Instinct

Benoit Delhomme இயக்கிய படம் `Mothers' Instinct'. ஆலிஸ் - செலின் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் நெருக்கமான தோழிகள். ஆனால் திடீரென நிகழும் ஒரு விபத்தும் அதைத் தொடர்ந்து நடக்கும் உளவியல் போராட்டங்களுமே கதை.

Theatre

Srikakulam Sherlockholmes (Telugu) - Dec 25

Srikakulam Sherlockholmes

மோகன் இயக்கத்தில் வெண்ணிலா கிஷோர் நடித்துள்ள படம் `Srikakulam Sherlockholmes'. விசாகப்பட்டின கடற்கரையில் மேரி என்ற பெண் கொலை செய்யப்பட்டு கிடக்க, அந்த கேஸை விசாரிக்கிறார் ஸ்ரீகுளம் ஷெர்லாக் ஹோல்ம்ஸ். மர்மம் தீர்க்கப்பட்டதா என்பதே கதை.

Barroz (Malayalam) - Dec 25

Barroz

மோகன்லால் இயக்குநராக களம் இறங்கியுள்ள படம் `Barroz'. புதையலை காத்து நிற்கும் பூதம் பற்றிய கதை.

Baby John (Hindi) - Dec 25

Baby John

களீஸ் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி நடித்துள்ள படம் `Baby John'. தமிழில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்தான் இது.

Thiru.Manickam (Tamil) - Dec 27

Thiru Manickam

நந்தா பெரியசாமி இயக்கியுள்ள படம் `திரு மாணிக்கம்'. மாணிக்கம் என்ற மனிதனின் வாழ்வில் நடக்கும் சிக்கல்களும் அதன் தீர்வுகளுமே கதை.

Smile Man (Tamil) - Dec 27

Smile Man

ஷ்யாம் - பிரவீன் இயக்கியுள்ள படம் `ஸ்மைல் மேன்'. அல்சைமரால் பாதிக்கப்பட்ட காவலதிகாரி, ஒரு சீரியல் கில்லர் வழக்கை விசாரிப்பதே கதை.

Rajakili (Tamil) - Dec 27

Rajaakkili

உமாபதி இயக்கத்தில் தம்பிராமையா, சமுத்திரக்கனி நடித்துள்ள படம் `ராஜாக்கிளி'. வசதியாக வாழ்ந்த ஒரு நபரின் வாழ்க்கை, தலைகீழாகிறது. அதன் காரணமும், முடிவும் தான் கதை.

Alangu (Tamil) - Dec 27

Alangu

சக்திவேல் இயக்கியுள்ள படம் `அலங்கு'. அரசியல்வாதிகளை எதிர்த்து, மலைவாழ் மக்க நடத்தும் வாழ்க்கை போராட்டமே கதை.

Mazhaiyil Nanaigiren (Tamil) - Dec 27

Mazhaiyil Nanaigiren

சுரேஷ் குமார் இயக்கத்தில் அன்சன் பால் மற்றும் ரெபா மோனிகா நடித்துள்ள படம் `மழையில் நினைகிறேன்'.காதல், வாழ்க்கை எனப் பல சிக்கல்களை பேசும் படம்.

MAX (Kannada) - Dec 27

MAX

விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் சுதீப் நடித்துள்ள படம் `MAX'. அர்ஜுன் என்ற நபர் சந்திக்கும் சவால்களே கதை.